ஜீலம் ஆறு
ஜீலம் ஆறு (காஷ்மீரி: Vyeth, இந்தி: झेलम, பஞ்சாபி: ਜੇਹਲਮ, உருது: دریاۓ جہلم) சிந்து ஆற்றின் துணை ஆறாகும். இதன் நீளம் 480 மைல் (774 கிமீ). இதுவே பஞ்சாபின் ஐந்து ஆறுகளில் மேற்கு கோடியில் பாயும் ஆறாகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கின் தென்கிழக்கு பகுதியில் அமைந்த பீர் பஞ்சல் தொடரில் ஜீலம் ஆறு உற்பத்தியாகி ஸ்ரீநகர் மற்றும் வுலர் ஏரி வழியாக பாய்ந்து பாக்கிஸ்தானை அடைகிறது. முசாஃபராபாத் நகரில் இதன் பெரிய துணை ஆறாகிய நீலம் இணைகிறது. அதற்கடுத்த பெரிய ஆறான குனார் ஆறு ஜீலம் ஆற்றுடன் இணைகிறது.
டிரிமு என்னுமிடத்தில் செனாப் ஆற்றுடன் ஜீலம் ஆறு இணைகிறது. செனாப் ஆறு சத்லஜ் ஆற்றுடன் இணைந்து பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் இணைகிறது.