உள்ளடக்கத்துக்குச் செல்

காம்போஜர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேத காலத்தைச் சேர்ந்த இந்தியாவின் வடமேற்கு எல்லையில் அமைந்த காம்போஜ நாடு
மகாஜனபத நாடுகளில் ஒன்றான காம்போஜ நாடு
காம்போஜ இராணியின் சிலை, கிபி முதல் நூற்றாண்டு, அரசு அருங்காட்சியகம், மதுரா

காம்போஜர்கள் (Kambojas) எனும் இனக் குழுக்கள் குறித்து இந்தியாவின் இரும்புக் காலத்தவர்கள் என பண்டைய சமசுகிருதம் மற்றும் பாலி இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ளது. காம்போஜர்கள் ஆண்ட காம்போஜம் எனும் நாடு, காந்தாரதேசத்திற்கு அருகே அமைந்தது. காம்போஜம் 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாகும்.

பண்டைய இந்தியாவின் வடமேற்கு பகுதியின் தற்கால கிழக்கு ஆப்கானிஸ்தானத்தில் உள்ள காம்போஜ நாட்டினர் குதிரை வளர்ப்புக் கலையிலும்; குதிரையேற்றப் பயிற்சியிலும் வல்லவர்கள். [1][2]அஸ்வம் எனும் குதிரையை காம்போஜர்கள் பேணியதால், பண்டைய காம்போஜர்களை அஸ்வகர்கள் என அழைத்தனர். போர்களில் காம்போஜர்களின் குதிரைப்படை திறம்பட செயல்பட்டது.

வரலாறு[தொகு]

பண்டைய காம்போஜர்கள் இந்தோ-ஈரானிய இனக்குழுக்கள் ஆவர். "கி பி முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவை கைப்பற்றிய இந்தோ-ஈரானியர்களான சசானியர்கள் மற்றும் பார்த்தியர்களின் வழித்தோண்றல்களே காம்போஜர்கள் ஆவார்" இவர்கள் ஆண்ட நாட்டை காம்போஜம் என்பர்.

சில வரலாற்று ஆய்வாளர்கள் காம்போஜர்களை இந்தோ-ஆரியர்கள் எனக் குறிப்பர்.[3][4][5] [6][7][8] சகர் அரச மரபிலிருந்து தோண்றியவர்களே காம்போஜர்கள் எனக் கூறுகின்றனர்.[9]

காம்போஜர்கள் ஆண்ட பகுதிகள்[தொகு]

பௌத்த நூல்கள், காம்போஜம், 16 மகாஜனபத நாடுகளில் ஒன்றாக கூறுகிறது.[10]

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் எனும் நூல் மற்றும் அசோகரின் கல்வெட்டு எண் XIII-இல் காம்போஜம் ஒரு குடியரசு நாடு எனக் குறித்துள்ளது. பாணினியின் செய்யுட்களில் காம்போஜம், ஒரு சத்திரிய முடியாட்சி நாடு எனிலும், அமைச்சரவையின் அறிவுரைகளின் படி ஆட்சி செய்யும் மன்னனை கொண்டது என்று கூறுகிறது. [11]

காம்போஜர் - அலெக்சாண்டர் பிணக்கு[தொகு]

அலெக்சாண்டர் பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசை வென்ற பின், வட இந்தியாவின் பஞ்சாபை ஆண்டு வந்த மன்னர் போரசை வெற்றி கொள்ள, ஆப்கானிஸ்தானத்தை கடந்து வரும் வழியில் காம்போஜர்களுக்கும், அலெக்சாண்டரின் படையினருக்கும் பிணக்கு உண்டானது.[12][13]

இந்தியாவில் குடியேற்றம்[தொகு]

கி மு இரண்டாம் மற்றும் முதல் நூற்றாண்டுகளில் காம்போஜர்கள், வடக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து, சகர்கள் மற்றும் யவனர்களுடன், பண்டைய இந்தியாவின் சிந்து, சௌராஷ்டிரம், மால்வா, இராஜஸ்தான், பஞ்சாப், சூரசேனம் போன்ற பகுதிகளில் நிரந்தரமாக குடியேறி, தென்மேற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் தன்னாட்சி மிக்க நாடுகளை அமைத்துக் கொண்டனர். இவ்வினத்தின் வழித்தோண்றல் பின்னர் கௌடப் பேரரசு, பாலப் பேரரசுகளை வென்று, வங்காளத்தில் காம்போஜ-பாலப் பேரரசை நிறுவினர்.[14][15][16] இறுதி காம்போஜ-பாலப் பேரரசு முதலாம் இராசேந்திர சோழானால் 11-ஆம் நூற்றாண்டில் வெல்லப்பட்டது.[17][18]

இதிகாசக் குறிப்புகள்[தொகு]

மகாபாரத இதிகாசத்தில் சகர்கள், யவனர்கள் மற்றும் பகலவர்களை, வடமேற்கிலிருந்து, பரத கண்டத்தில் குடியேறியவர்கள் எனக் குறித்துள்ளது.[5][19][20][21] [22]

மௌரியப் பேரரசில்[தொகு]

கி மு மூன்றாம் நூற்றாண்டு அசோகரது கல்வெட்டுகளில் காம்போஜர்கள், மௌரியப் பேரரசில் தன்னாட்சியுன் ஆட்சிபுரிந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.[5][23]

அசோகரது கல்வெட்டு எண் V -இல் காம்போஜம், காந்தாரம் போன்ற மகாஜனபதங்களைக் குறித்துள்ளது.

காம்போஜர்களை பௌத்த சமயத்திற்கு மதம் மாற்ற பௌத்த பிக்குகளை அனுப்பி வைத்தார் என்பதை அசோகரது கல்வெட்டு எண் ஐந்திலிருந்து தெரியவருகிறது.[24][25][26]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Indian Historical Quarterly, 1963, p 103
 2. Hindu Polity, 1978, pp 121, 140, K. P. Jayswal.
 3. Mishra 1987
 4. Ramesh Chandra Majumdar, Achut Dattatrya Pusalker, A. K. Majumdar, Dilip Kumar Ghose, Bharatiya Vidya Bhavan, Vishvanath Govind Dighe. The History and Culture of the Indian People, 1962,11- volume, p 264,
 5. 5.0 5.1 5.2 "Political History of Ancient India", H. C. Raychaudhuri, B. N. Mukerjee, University of Calcutta, 1996.
 6. See: Vedic Index of names & subjects by Arthur Anthony Macdonnel, Arthur. B Keath, I.84, p 138.
 7. See more Refs: Ethnology of Ancient Bhārata, 1970, p 107, Ram Chandra Jain; The Journal of Asian Studies, 1956, p 384, Association for Asian Studies, Far Eastern Association (U.S.)
 8. India as Known to Pāṇini: A Study of the Cultural Material in the Ashṭādhyāyī, 1953, p 49, Vasudeva Sharana Agrawala; Afghanistan, p 58, W. K. Fraser, M. C. Gillet; Afghanistan, its People, its Society, its Culture, Donal N. Wilber, 1962, p 80, 311
 9. Walker and Tapp 2001
 10. பார்க்க: Problems of Ancient India, 2000, p 5-6; cf: Geographical Data in the Early Puranas, p 168.
 11. Hindu Polity: A Constitutional History of India in Hindu Times, Parts I and II., 1955, p 52, Dr Kashi Prasad Jayaswal - Constitutional history; Prācīna Kamboja, jana aura janapada =: Ancient Kamboja, people and country, 1981, Dr Jiyālāla Kāmboja - Kamboja (Pakistan).
 12. Panjab Past and Present, pp 9-10; also see: History of Porus, pp 12, 38, Buddha Parkash
 13. Proceedings, 1965, p 39, by Punjabi University. Dept. of Punjab Historical Studies - History.
 14. Geographical Data in the Early Purāṇas: A Critical Study, 1972, p 168, M. R. Singh - India.
 15. History of Ceylon, 1959, p 91, Ceylon University, University of Ceylon, Peradeniya, Hem Chandra Ray, K. M. De Silva.
 16. Pande (R.) 1984, p. 93
 17. Ancient Indian History and Civilization by Sailendra Nath Sen p.281
 18. The Cambridge Shorter History of India p.145
 19. Shrava 1981, p. 12
 20. Rishi, 1982, p. 100
 21. Indological Studies, 1950, p 32, B. C. Law
 22. See: Corpus Inscriptionum Indicarum, Vol II, Part I, p xxxvi; see also p 36, Sten Konow; Indian Culture, 1934, p 193, Indian Research Institute; Cf: Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland, 1990, p 142, Royal Asiatic Society of Great Britain and Ireland - Middle East.
 23. H. C. Raychaudhury, B. N. Mukerjee; Asoka and His Inscriptions, 3d Ed, 1968, p 149, Beni Madhab Barua, Ishwar Nath Topa.
 24. The North-west India of the Second Century B.C., 1974, p 40, Mehta Vasishtha Dev Mohan - India; Tribes in Ancient India, 1973, p 7, B. C. Law - Ethnology
 25. Anand 1996, p. 79
 26. Yar-Shater 1983, p. 951

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதார நூல் பட்டியல்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்போஜர்கள்&oldid=3801672" இலிருந்து மீள்விக்கப்பட்டது