கௌடப் பேரரசு (Gauda Kingdom) (வங்காள: গৌড় রাজ্য Gāur Rājya ), (ஆட்சி: கி. பி 590 - 626), தற்கால பிகார் மாநிலத்தின் முர்சிதாபாத் நகரை தலைநகராகக் கொண்டு தற்கால பிகாரின் பகுதிகள், வங்காளம், ஒடிசா மற்றும் அசாம் பகுதிகளை கி. பி 590 முதல் 626 முடிய ஆண்டது. கௌடப் பேரரசர்களில் தலைசிறந்தவர் சசாங்கன் ஆவர்.[1][2]. கௌடப் பேரரசின் தலைநகரம் கர்ணசுபர்னா என்ற தற்கால முர்சிதாபாத்த்தின் தலைமையிட நகரமான பெர்ஹாம்பூர் நகரம் ஆகும். [3]
சீன யாத்திரிகனும் பௌத்த அறிஞருமான யுவான் சுவாங் சசாங்கன் ஆண்ட கௌடப் பேரரசின் கர்ணசுபர்னா பகுதிக்கு சென்று வந்தவர்.[2].[4]