கஜபதி பேரரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஜபதி பேரரசு

 
[[ரெட்டிப் பேரரசு|]]
கிபி 1434–கிபி 1541 [[விசயநகரப் பேரரசு|]]
கபிலேந்திர தேவன் காலத்திய கஜபதி பேரரசின் வரைபடம்
தலைநகரம் கட்டக்
சமயம் இந்து சமயம்
அரசாங்கம் முடியாட்சி
கஜபதி கௌடேஸ்வர நவகோடி உத்கல கலாவர்கேஷ்வரர்
 -  1434 – 1466 கபிலேந்திர தேவன்
 -  1466–97 புருசோத்தம தேவன்
 -  1497 – 1540 பிரதாப ருத்திர தேவன்
 -  1540 – 1541 கழுவத் தேவன்
 -  1541 ககாருவத் தேவன்
வரலாற்றுக் காலம் மத்தியகால இந்தியா
 -  உருவாக்கம் கிபி 1434
 -  குலைவு கிபி 1541
Warning: Value specified for "continent" does not comply

கஜபதி பேரரசு (Gajapati Kingdom) (ஆட்சி காலம்: 1434 முதல் 1541 முடிய), இந்தியாவின் கட்டக் நகரத்தை தலைநகராகக் கொண்டு, தற்கால ஒடிசா, மேற்கு வங்காளம், தெற்கு பிகார், ஆந்திரம், மத்திய - கிழக்கு மத்தியப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளை 1434 முதல் 1541 முடிய ஆண்ட, மத்தியகால இந்து பேரராசாகும்.

கஜபதி பேரரசை 1434இல் நிறுவிய கபிலேந்திரா தேவன், 1434 முதல் 1466 முடிய பேரரசை ஆண்டார். கஜபதி பேரரசர்களில் சிறப்பானவர்கள், புருசோத்தம தேவன் (1466 - 1497) மற்றும் பிரதாப ருத்திர தேவன் (1497-1540). கடைசிப் பேரரசன் ககாருவத் தேவனை 1541இல், கோவிந்த வித்தியாதரன் என்பவன் கொன்று போய் குல அரசை (Bhoi dynasty) நிறுவினான்.

கஜபதி எனில் பெரும் யாணை படைகளை கொண்ட அரசன் என்று பொருள்.

புரி தேர்த் திருவிழாவின் போது, கஜபதி பேரரசின் வழித்தோன்றல்களுக்கு இன்றளவும், கோயில் சார்பாக மரியாதை செய்யப்படுகிறது.

கஜபதி பேரரசை கௌரவிக்கும் வகையில் ஒடிசா அரசு ஒரு மாவட்டத்திற்கு கஜபதி மாவட்டம் என்று பெயரிட்டுள்ளது.[1]

கஜபதி பேரரசின் ஆட்சியாளர்கள்[தொகு]

  1. கபிலேந்திர தேவன் (1434–70)[2]
  2. புருசோத்தம தேவன் (1470–1497)
  3. பிரதாப ருத்திரத் தேவன் (1497–1540)
  4. கழுவத்தேவன் (1540–41)
  5. ககாருவத் தேவன் (1541)


மேற்கோள்கள்[தொகு]

  1. Majumdar, R.C. (ed.) (2006). The Delhi Sultanate, Mumbai: Bharatiya Vidya Bhavan, pp. 365–72.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஜபதி_பேரரசு&oldid=3497324" இருந்து மீள்விக்கப்பட்டது