மகாமேகவாகன வம்சம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மகாமேகவாகன வம்சம்
ମହାମେଘବାହନ

கிமு 250–கிபி 400
தலைநகரம் சிங்கபுரம்
மொழி(கள்) ஒரியா மொழி
சமயம் சமணம்
அரசாங்கம் முடியாட்சி
வரலாற்றுக் காலம் செந்நெறிக்கால இந்தியா
 -  உருவாக்கம் கிமு 250
 -  குலைவு கிபி 400

மகாமேகவாகன வம்சம் என்பது, மௌரியப் பேரரசு வலிமையிழந்த பின்னர் கலிங்கத்தை ஆண்ட பண்டைய அரச வம்சங்களில் ஒன்று. இவ்வம்சத்தின் மூன்றாவது ஆட்சியாளனாகிய காரவேலன் தொடர்ச்சியான படையெடுப்புக்கள் மூலம் இந்தியாவின் பெரும் பகுதியைக் கைப்பற்றினான். காரவேலனின் தலைமையின் கீழ் கலிங்கத்தின் படை வலிமை மீண்டும் கட்டியெழுப்பப்பட்டது. இக்காலத்தில் கலிங்கப் பேரரசு கங்கை முதல் காவிரி வரை பரந்திருந்தது. இவ்வம்சத்தினரின் ஆட்சியின்கீழ் குறிப்பாகக் காரவேலனின் ஆட்சியின் கீழ், கடல் ஆதிக்கம் பெற்றிருந்த கலிங்கம், இலங்கை, பர்மா, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, போர்னியோ, பாலி, சுமாத்திரா, ஜாவா போன்ற நாடுகளுடன் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது.

இவ்வம்சத்து அரசர்கள்[தொகு]

  1. மகாமேகவாகனன்
  2. சேதராஜா
  3. காரவேலன்
  4. குடேபசிரி
  5. பதுக்கா
  6. மகாசாதன்
  7. சாதாவின் வழியினர்

மேற்கோள்கள்[தொகு]

[[

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாமேகவாகன_வம்சம்&oldid=2487623" இருந்து மீள்விக்கப்பட்டது