அலெக்சாண்டர் கன்னிங்காம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சர். அலெக்சாண்டர் கன்னிங்காம்
Alexander Cunningham of the ASI 02.jpg
பிறப்பு(1814-01-23)சனவரி 23, 1814
இலண்டன்
இறப்புநவம்பர் 18, 1893(1893-11-18) (அகவை 79)
இலண்டன்
தேசியம்ஐக்கிய இராச்சியம்

சர். அலெக்சாண்டர் கன்னிங்காம் (Alexander Cunningham, 23 ஜனவரி 181428 நவம்பர் 1893) ஒரு பிரித்தானியத் தொல்லியலாளரும், படைத்துறைப் பொறியாளரும் ஆவார். இந்தியத் தொல்லியல் ஆய்வுகளின் தந்தை எனப்போற்றப்படும் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்கரான பதவி வகித்தவர்.[1][2] இவரது உடன் பிறந்தோரான பிரான்சிஸ் கன்னிங்காம், ஜோசப் கன்னிங்காம் என்போரும் தத்தமது வேலைகளுக்காகப் பிரித்தானிய இந்தியாவில் பெயர் பெற்றவர்களாக இருந்தனர்.

இளமைக் காலம்[தொகு]

இவர் 1814 ஆம் ஆண்டில், இலண்டனில், ஸ்கொட்டியக் கவிஞரான அலம் கன்னிங்காம் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். இலண்டனில் உள்ள கிறிஸ்துவின் மருத்துவநிலையம் எனப்பட்ட நிறுவனத்தில் தொடக்கக் கல்வியைப் பெற்றார். பின்னர் அடிஸ்கோம்பே என்னும் இடத்திலிருந்த எம். ஈ. ஐ கம்பனியின் மடாலயத்திலும், சத்தாமில் இருந்த ஆர். ஈ. எஸ்ட்டேட்டிலும் கல்வி கற்றார். 19 ஆவது வயதில் வங்காளப் பொறியாளர் குழுவில் இரண்டாம் லெப்டினண்டாக இணைந்த அவர், அடுத்த 28 ஆண்டுகள் இந்தியப் பிரித்தானிய அரச சேவையில் பணியாற்றினார். 1833 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவுக்கு வந்ததுமே, ஜேம்ஸ் பிரின்செப் என்பவருடன் இவருக்குக் கிடைத்த சந்திப்பு, இந்தியத் தொல்லியல் மீது வாழ்நாள் முழுதும் இவர் கொண்டிருந்த ஆர்வத்துக்குக் காரணமாகியது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் முதல் தலைமை இயக்குனராக பணியாற்றியவர்.

வெளிக்கொணர்ந்த சில தொல்லியற்களங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. அலெக்சாண்டர் கன்னிங்காம் இந்தியத் தொல்லியல் ஆய்வின் தந்தை
  2. Sir Alexander Cunningham
முன்னர்
உருவாக்கம்
தலைமை இயக்குநர் இந்திய தொல்லியல் துறை
1871-1885
பின்னர்
ஜேம்ஸ் பர்கெஸ்