ஜெகத்பதி ஜோஷி
ஜெகத்பதி ஜோஷி (Jagat Pati Joshi) (பிறப்பு: 14 சூலை 1932 - இறப்பு:28 சூன் 2008) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1987 முதல் 1990-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர். இவர் குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள தோலாவிரா மற்றும் சுர்கோட்டா ஆகிய சிந்துவெளி நாகரித்தின் தொல்லியல் களங்களான அகழாய்வு செய்தவர்.
இளமை வாழ்கை[தொகு]
ஜெகத்பதி ஜோஷி பிரித்தானிய இந்தியாவின் அல்மோரா நகரத்தில் 14 சூலை 1932-இல் பிறந்தவர். இவர் 1954-இல் லக்னோ பல்கலைகழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் பண்பாட்டுப் படிப்பில் முதுநிலை பட்டம் பெற்றார். 1961-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து அதன் தொல்லியல் பயிற்சி நிறுவனத்தில் தொல்லியல் துறையில் பட்டயப் படிப்பு முடித்தார்.
பணி[தொகு]
ஜெகத்பதி ஜோஷி 1966-இல் சிந்துவெளி நாகரித்தின் தொல்லியல் களங்களான தோலாவிரா, சுர்கோட்டா மற்றும் மால்வான் தொல்லியற்களங்களை, எப்.ரேமாண்ட் ஆல்சின்னுடன் இணைந்து அகழாய்வு செய்தார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1987 முதல் 1990-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார்.
படைப்புகள்[தொகு]
ஜெகத் பதி ஜோஷி சிந்துவெளி நாகரிகத் தொல்லியல் களங்களான அரப்பா, சுர்கோட்டா, தோலாவிரா குறித்து பல நூல்களை வெளியிட்டுள்ளார்.[1][2]அவைகள்:
- Harappan Architecture and Civil Engineering (History of Indian Science and Technology
- Excavation at Surkotada and Exploration in Kutch
- Corpus of Indus Seals and Inscriptions, Vol. 1
- Facets of Indian Civilization: Recent Perspectives
மேற்கோள்கள்[தொகு]
- "C. V.:Sri Jagat Pati Joshi". Infinity Foundation. http://www.infinityfoundation.com/mandala/t_pr/t_pr_joshi_cv_frameset.htm.