உள்ளடக்கத்துக்குச் செல்

மாதோ சரூப் வாட்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டித மாதோ சரூப் வாட்ஸ் (Pandit Madho Sarup Vats) (12 ஏப்ரல் 1896 – 7 டிசம்பர் 1955) தொல்லியல்]] மற்றும் சமசுகிருதம்|சமசுகிருத]] அறிஞரும், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1950-ஆம் ஆண்டு முதல் 1954-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தவர். இவர் 920-21 மற்றும் 1933-34-ஆம் ஆண்டுகளில் சிந்துவெளி நாகரித்தின் அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ தொல்லியல் களங்களில் அகழாய்வு செய்தவர்களில் ஒருவர்.

12 ஏப்ரல் 1896 அன்று பஞ்சாபி குடும்பத்தில் பிறந்த இவர் பஞ்சாப் பல்கலைக்கழகம் மற்றும் லாகூர் பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றார். 1918-இல் பாட்னா அருங்காட்சியகக் காப்பாளராக பணியேற்றார். மார்ச், 1920-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் உதவித் தொல்லியல் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர் மகாராட்டிரா மாநிலத்தின் புணே மாவட்டத்தில் உள்ள கர்லா பௌத்த குகைகளின் கல்வெட்டுக்களை கண்டுபிடித்தார். பின்னர் இடையில் நின்ற மொகெஞ்சதாரோ தொல்லியல் களத்தை மீண்டும் அகழாய்வு செய்தார். 1925-ஆம் ஆண்டில் இவர் வடக்கு வட்டத்தின் கண்காணிப்பு தொல்லியல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றதுடன், அரப்பா தொல்லியல் களத்தை மீண்டும் அகழாய்வு செய்தார். பின்னர் 1950 முதல் இறக்கும் வரை 1955-ஆம் ஆண்டு வரை இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக பதவியில் இருந்தார்.

எழுதிய நூல்கள்

[தொகு]
  • EXCAVATIONS AT HARAPPA[1]
  • Excavations at Harappa: Being an Account of Archaeological Excavations at Harappa Carried Out Between the Years 1920-21 and 1933-34, 2 [2]

மேற்கோள்கள்

[தொகு]
முன்னர் தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1950 - 1953
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதோ_சரூப்_வாட்ஸ்&oldid=3328192" இலிருந்து மீள்விக்கப்பட்டது