தயாராம் சகானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயா ராம் சகானி
பிறப்பு(1879-12-16)திசம்பர் 16, 1879
பெக்ரா, பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்புமார்ச்சு 7, 1939(1939-03-07) (அகவை 59)
ஜெய்பூர் இராச்சியம்
அறியப்படுவதுஅரப்பா அகழ்வாய்வு
தாக்கம் 
செலுத்தியோர்
ஜான் மார்ஷல்

ராவ் பகதூர் தயாராம் சகானி (Daya Ram Sahni) (16 டிசம்பர் 1879 – 7 மார்ச் 1939), சிந்து வெளி தொல்லியல் களமான அரப்பாவில் 1921 - 22 ஆண்டுகளில், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனர் ஜான் மார்ஷலுடன் இணைந்து அகழ்வாய்வுகள் மேற்கொண்டவர். தயாராம் சகானி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக 1931 முதல் 1935 முடிய பதவி வகித்தார்.

தொல்லியல் ஆய்வாளராக[தொகு]

தயாராம் சகானி, 1903ல் பிரித்தானிய பஞ்சாப் மற்றும் ஐக்கிய மாகாண சரகத்தில் தொல்லியல் ஆய்வாளராக, ஜெ. பி. வேகில் தலைமையில் பணியாற்றினார். தயாராம் சகானி, 1906ல் பிகாரில் உள்ள ராஜகிரகத்தில் அகழாய்வுகள் மேற்கொண்டார்.

செப்டம்பர், 1907ல் பிகார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் ராம்பூர்வா மற்றும் சாரநாத் பௌத்த தொல்லியல் களங்களை, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனர் ஜான் மார்ஷலுடன் இணைந்து அகழாய்வுகள் மேற்கொண்டவர்.

தயாராம் சகானி 1911 முதல் 1912 முடிய லக்னோ அருங்காட்சியகத்தின் பொறுப்பாளராக பணியாற்றினார். பின்னர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டார்.

1917ல் பஞ்சாப் மாகாணம் மற்றும் ஐக்கிய மாகாணத்தின் தொல்லியல் துறையின், லாகூர் அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளராக பதவியேற்றார். தயாராம் சகானி சிந்து வெளி களத்தின் அரப்பாவில் அகழ்வாய்வுப் பணிகளில் கலந்துகொண்டார்.

தயாராம் சகானி, இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக, 1931 முதல் 1935 முடிய தில்லியில் பணியாற்றினார்.[1] இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குனராக பதவியேற்ற முதல் இந்தியர் என்ற பெருமை தயாராம் சகானிக்கு உண்டு.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dirctor Generals of ASI
முன்னர்
அரால்டு அர்க்கிரீவ்ஸ்
தலைமை இயக்குனர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1931-1935
பின்னர்
ஜெ. எப். பிளாகிஸ்டன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயாராம்_சகானி&oldid=3350022" இருந்து மீள்விக்கப்பட்டது