எம். என். தேஷ் பாண்டே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதுசூதன் நர்கர் தேஷ்பாண்டே (Madhusudan Narhar Deshpande) (11 நவம்பர் 1920 - 7 ஆகஸ்டு 2008), இந்தியத் தொல்லியல், கலை வரலாற்றாளர் மற்றும் தொல்பொருள் காப்பாளரும் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1972 முதல் 1978-ஆம் ஆண்டு முடிய பணியாற்றியவர்.[1][2][3]

மகாராட்டிரா மாநிலத்தின் சதாரா மாவ்ட்டத்தில் 1920-ஆம் ஆண்டில் பிறந்த எம். என். தேஷ் பாண்டே தனது இளநிலை பட்டப் படிப்பை புனேவில் உள்ள பெர்க்குசன் கல்லூரியிலும்; முதுநிலை கலை வரலாற்றுப் படிப்பை டெக்கான் முதுகலை மற்றும் ஆய்வு நிறுவனத்திலும் முடித்தார். பின்னர் மோர்டிமர் வீலர் தலைமையிலான இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்து, தட்சசீலத்தில் அமைந்த தொல்லியல் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.[4]

படைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  • Rao, M. S. Nagaraja (1981). Madhu: recent researches in Indian archaeology and art history : Shri M.N. Deshpande festschrift. Agam Kala Prakashan. 
முன்னர்
பி. பா. லால்
தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1972 - 1978
பின்னர்
பி. கே. தாபர்"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._என்._தேஷ்_பாண்டே&oldid=3341792" இருந்து மீள்விக்கப்பட்டது