அமலானந்த கோஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமலானந்த கோஷ்
பிறப்புமார்ச்சு 3, 1910(1910-03-03)
வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா
இறப்பு1981
தேசியம்இந்தியர்
பணிதொல்லியல்
அறியப்படுவதுதலைமை இயக்குநர், இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

அமலானந்த கோஷ் (Amalananda Ghosh) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1955-ஆம் ஆண்டு முதல் பதவி வகித்தவர். இவர் இந்திய நாகரிகம் குறித்த பல நூல்களை வெளியிட்டவர்.

3 மார்ச் 1910 அன்று வாரணாசியில் பிறந்த அமலானந்த கோஷ், அலகாபாத்தில் கல்லூரிப் படிப்பு முடித்த பின், இலண்டன் பல்கலைக்கழகத்தின் அகழாய்வு நிறுவனத்தில் சிறப்பு பயிற்சி பெற்றார்.[1][2]

1930-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்த அமலானந்த கோஷ் பின்னர் அத்துறையின் தலைமை இயக்குநராக 1953 முதல் 1968-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார்.[3]

இவர் பணியில் இருந்த போது மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் ஹோசங்காபாத் மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ள பச்மர்கி[4] பிரம்மகிரி, மஸ்கி, தட்சசீலம், அரிக்கமேடு மற்றும் அரப்பா தொல்லியல் களங்களை அகழாய்வு செய்தார். 1950-இல் இராஜஸ்தான் மாநிலத்தின் சரஸ்வதி ஆறு பாய்ந்த பிகானேர் பகுதிகளில் அகழாய்வு செய்து அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ தொடர்புடைய 70 தொல்லியல் களங்களை கண்டுபிடித்தார். இவர் 1961-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநாக பதவியேற்றார்.

படைப்புகள்[தொகு]

 • The Encyclopedia of Indian Archaeology,[5]
 • A Survey of the Recent Progress in Early Indian Archaeology,[6]
 • The City in Early Historical India,[7]
 • A Guide to Nālandā.[8]

விருதுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Ghosh, Amalananda, The Free Dictionary [1] accessed 24 August 2011.
 2. An Encyclopedia of Indian Archaeology, Edited by Amalananda Ghosh [2] பரணிடப்பட்டது 2018-03-28 at the வந்தவழி இயந்திரம் accessed 24 August 2011.
 3. Indian Archaeology 1953-1954, A Review [3] பரணிடப்பட்டது 11 அக்டோபர் 2011 at the வந்தவழி இயந்திரம் accessed 24 Aug. 2011
 4. What Lies Beneath, Hindustan Times
 5. An Encyclopedia of Indian Archaeology, Google Books
 6. A Survey of the Recent Progress in Early Indian Archaeology, Google Books [4]
 7. The City in Early Historical India, Google Books
 8. A Guide to Nālandā

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
மாதோ சரூப் வாட்ஸ்
தலைமை இயக்குநர்
இந்தியத் தொல்லியல் ஆய்வகம்

1953 - 1969
பின்னர்
பி. பா. லால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமலானந்த_கோஷ்&oldid=3373300" இருந்து மீள்விக்கப்பட்டது