அரால்டு அர்க்கிரீவ்ஸ்
அரால்டு அர்க்கிரீவ்ஸ் (Harold Hargreaves) (பிறப்பு: 29 மே 1876) பிரித்தானிய இந்தியாவின் தொல்லியல் ஆய்வாளர் ஆவார். இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1928 முதல் 1931-ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர்.
பௌத்த சிறபக் கலைகளைல் வல்லுநராக இருந்த அரால்டு அர்க்கிரீவ்ஸ், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் சேர்வதற்கு முன்னர் அமிர்தசரஸ் நகர அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தார்.
இந்தியத் தொல்லியல் ஆய்வகப் பணியில்
[தொகு]இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தில் 1910 -12-ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற வட்டடதின் கண்காணிப்பு தொல்லியலாளர் பணியில் இருந்த போது ஜான் மாரசலுடன் இணைந்து அரப்பா இராஜன்பூர் மற்றும் சாரநாத் தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பணிகளில் கலந்து கொண்டார். 1924-இல் இவர் தற்கால பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாநிலத்தின் நல் எனுமிடத்தில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டார். 1928-ஆம் ஆண்டில் இவர் தொல்லியல் ஆய்வகத்தின் கூடுதல் தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் ஜான் மாரஷல் ஓய்வுக்குப் பின் இவர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் தலைமை இயக்குநராக 1928-ஆம் ஆண்டில் பதவி ஏற்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- Navanjot Lahiri (2005). Finding Forgotten Cities: How the Indus Civilization was discovered. Hachette India.