அரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிந்து சமவெளியில் அரப்பாவின் அமைவிடம்.
அரப்பா
Harappa
View of Granary and Great Hall on Mound F.JPG
அரப்பாவிலுள்ள களஞ்சியம் மற்றும் மண்டபம் ஒரு தோற்றம்
இருப்பிடம் சாகிவால். பஞ்சாப், பாக்கித்தான்
வகை குடியிருப்பு
பரப்பளவு 150 ha (370 acres)
வரலாறு
காலம் அரப்பா 1 முதல் அரப்பா 5
கலாச்சாரம் சிந்து சமவெளி நாகரிகம்
பகுதிக் குறிப்புகள்
நிலை இடிபாடுகள்
பொது அனுமதி ஆம்
இணையத்தளம் www.harappa.com

அரப்பா (Harappa) என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது[1]. அரப்பா என்ற இத்தளத்தின் பெயர் ராவி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள நவீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்நதி தற்போது இத்தளத்திர்கு வடக்கில் 8 கிலோ மீட்டர் தொலைவில் (5 மைல்) ஓடுகிறது. தற்போது அரப்பா என்றழைக்கப்படும் கிராமம் பண்டைய தொல்லியல் தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளது. நவீன அரப்பா பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து இருக்கின்ற ஒரு மரபுரிமை ரயில் நிலையமாக இருந்தாலும், இன்றும் அந்நகரம் 15,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட ஊராக உள்ளது.

இத்தொல்லியல் தளத்தில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த பண்டைய கோட்டை நகரத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்நகரமும் இடிபாடுகளும் சிந்து மற்றும் பஞ்சாப்பை மையமாகக் கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரிகத்தையும் மற்றும் அதைத் தொடர்ந்து இருந்த கல்லைறை எச் கலாச்சாரத்தையும் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நகரத்தில் 23500 குடும்பங்கள் 370 ஏக்கர் பரப்பளவில் களிமண்ணும் சுட்ட செங்கற்களும் சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறசுது. சுமார் கி.மு 2600 – 1900 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்த இந்நாகரிகத்தின் காலத்தை முதிர்ந்த அரப்பன் காலகட்டம் என்கிறார்கள். அந்தச் சமயத்தில் இது ஒரு மிகப்பெரிய நாகரிகமாகக் கருதப்படுகிறது [2]. முன்னர் அறியப்படாத நாகரிகங்களுக்கு பெயரிடும் தொல்பொருள் மாநாட்டில், முதல் அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தை அரப்பா நாகரிகம் என்று பெயரிட்டு அழைத்தனர்.

பண்டைய அரப்பா நகரம் பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் மிகவும் சேதமடைந்தது, இடிபாடுகளில் இருந்து கிடைத்த செங்கற்களை லாகூர்-முல்தான் ரயில்வே கட்டுமானத்தில் இரயில்வே பாதைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கேளிக்கை பூங்கா அமைக்கும் திட்டம் 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது, கட்டடத்தின் ஆரம்ப கட்டப் பணிகளின்போது அங்கிருந்து கலைப்பொருட்கள் பல தோண்டி எடுக்கப்பட்டன. பாக்கித்தானிய தொல்பொருள் ஆய்வாளரான அகமத் அசன் டானி கலாச்சார அமைச்சகத்திற்கு வைத்த ஒரு வேண்டுகோள் இந்த தளத்தின் மறுசீரமைப்புக்கு காரணமாக இருந்தது [3].

வரலாறு[தொகு]

சிந்து சமவெளி நாகரிகம் பண்டைக்காலக் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படும் மெகெர்கர் போல தோராயமாக கி.மு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் ஆய்வுகளுக்கு உரிய மிக முக்கியமான பண்டைய வேர்கள் இங்குள்ளன. மொகஞ்சதாரோ அரப்பா ஆகிய இரு பெரிய நகரங்கள் கி.மு. 2600 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் சிந்துவில் சிந்து நதிக் கரையோரம் இருந்த பள்ளத்தாக்கில் தோன்றின [4]. லாகூரின் தெற்கே உள்ள மேற்கு பஞ்சாப் பகுதியில் அரப்பாவும் லர்கானாவுக்கு அருகிலுள்ள சிந்து பகுதியில் மொகஞ்சதாரோவும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஒரு சாத்தியமான எழுதும் முறை, நகர்ப்புற மையங்கள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த நாகரிகம் மீண்டும் 1920 களில் மீண்டும் கண்டறியப்பட்டது. வடகிழக்கு இந்தியா, கிழக்கு பஞ்சாப்பு, தெற்கில் குசராத்து மேற்கில் பாக்கித்தானின் பலுசிசுதான் போன்ற இமயமலையின் அடிவாரத்தில் நீட்சியாக வளர்ந்திருக்கும் பல தொல்லியல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அரப்பாவில் உள்ள தொல்பொருள் ஆய்வு தளம் 1857 ஆம் ஆண்டில் சேதமடைந்தது [5]. சிந்து மற்றும் பஞ்சாப் இரயில்வேயைச் சேர்ந்த பொறியாளர்கள் லாகூர்-முல்தான் இரயில் பாதை கட்டுமானத்தின் போது இரயில்வே பாதைகள் அமைக்க இத்தளத்திலிருந்து செங்கற்களை எடுத்துப் பயன்படுத்தினர் [6].இங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள் சிவப்பு மணல், களிமண், கற்களால் மிக அதிக வெப்பநிலையில் சுடப்பட்டு தயாரிக்கப்பட்டவையாகும். மேற்கு பஞ்சாபில் 1826 ஆம் ஆண்டு அரப்பா கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது, அரபாவில் ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகளுக்கு வித்திட்டவர்கள் அவர்களேயாகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Harappa
  2. Fagan, Brian (2003). People of the earth: an introduction to world prehistory. Pearson. பக். 414. ISBN 978-0-13-111316-9. 
  3. Tahir, Zulqernain. 26 May 2005. Probe body on Harappa park, Dawn. Retrieved 13 January 2006. Archived 11 March 2007 at the Wayback Machine.
  4. Beck, Roger B. (1999). World History: Patterns of Interaction. Evanston, IL: McDougal Littell. ISBN 0-395-87274-X. 
  5. Michel Danino. The Lost River. Penguin India.
  6. Kenoyer, J.M., 1997, Trade and Technology of the Indus Valley: New insights from Harappa Pakistan, World Archaeology, 29(2), pp. 260–280, High definition archaeology

புற இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரப்பா&oldid=2525535" இருந்து மீள்விக்கப்பட்டது