அம்ரிப் பண்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்ரிப் பண்பாடு என்பது, பாக்கித்தானில் உள்ள சிந்து, பலூச்சித்தான் ஆகிய மாகாணங்களில் காணும் அம்ரி தொல்லியல் களங்களுக்கு உரிய பண்பாடு ஆகும். பெரும்பாலும் பலூச்சித்தானிலும், கீழ் சிந்துவிலும் வெளிப்படுத்தப்பட்ட, குறைந்தது 160 குடியிருப்புக்கள் அம்ரிப் பண்பாட்டுக்கு உரியவை. இவை, பழைய ஆற்று வழிகளையும், தற்போதைய ஆற்று வழிகளையும் அண்டிய பகுதிகளில் பரவிக் காணப்படுகின்றன. இக்குடியிருப்புக்கள் வேறுபட்ட அளவுகளையும், வடிவங்களையும் கொண்டவை. சிலவேளைகளில் இவை பிற்காலக் குடியிருப்புக்களுக்குக் கீழேயுள்ள மண்ணடுக்குகளில் காணப்படுகின்றன. இவற்றுள், தார்ரோ குன்றுகளில் குச்சோ நகருக்கு அண்மையில் அமைந்துள்ள களம் கீழ் சிந்துப் பகுதியிள் உள்ளவற்றுள் மிகவும் புகழ்பெற்றது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரிப்_பண்பாடு&oldid=3752270" இலிருந்து மீள்விக்கப்பட்டது