பாபர் கொட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாபர் கோட் (Babar Kot) என்பது இந்தியாவின், குசராத் மாநிலத்தைச் சேர்ந்த சௌராட்டிரப் பகுதியில் உள்ள பவநகர் மாவட்டத்தில் பாபர் கோட் எனுமிடத்தில் சிந்துவெளி நாகரிகத்துக்கு உரிய ஒரு தொல்லியல் களம் ஆகும். இது அகமதாபாத்தில் இருந்து 325 கிலோமீட்டர் தொலைவிலும், பவநகரிலிருந்து 152 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

அகழ்வாய்வு[தொகு]

பென்சிவேனியாப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கிரெகரி பொசேல்(Gregory Possehl) என்பவர் இந்தக் களத்திலும், ரொஜ்டி, ஒரியா டிம்போ ஆகிய களங்களிலும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டார்.

இங்கே கண்டெடுக்கப்பட்டவற்றுள், பயறு வகைகள்,[1] சிறுதானியங்கள், பஜ்ரா (pennisetum typhoideum)[2] போன்ற தாவர எச்சங்களும் அடங்கும். அத்துடன் பஜ்ரா இக்களத்தில் கிமு 3 ஆம் ஆயிரவாண்டுக் காலத்திலேயே இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது.[3] பாபர் கொட்டில் கோடையில் ஒன்றும், மாரியில் ஒன்றுமாக இரு போகப் பயிர் விளைந்ததற்கான சான்றுகள் உள்ளன.[4]

வரலாற்று முக்கியத்துவம்[தொகு]

இக்களம் பிந்திய அரப்பாக் காலத்தைச் சேர்ந்ததாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 2.7 எக்டேர் பரப்பளவைக்கொண்ட இக் குடியிருப்பைச் சுற்றி பாதுகாப்புச் சுவர் இருந்துள்ளது.[1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்_கொட்&oldid=3439036" இருந்து மீள்விக்கப்பட்டது