குண்டசி தொல்லியல் களம்

ஆள்கூறுகள்: 22°54′32″N 70°35′30″E / 22.90889°N 70.59167°E / 22.90889; 70.59167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டசி
தொல்லியல் களம்
குண்டசி is located in இந்தியா
குண்டசி
குண்டசி
ஆள்கூறுகள்: 22°54′32″N 70°35′30″E / 22.90889°N 70.59167°E / 22.90889; 70.59167
மாநிலம்குஜராத்
மாவட்டம்மோர்பி மாவட்டம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5.30)

குண்டசி (Kuntasi) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கடற்கரை கிராமமும், சிந்துவெளி நாகரிக காலத்திய தொல்லியல் களமும் ஆகும். [1] [2] குண்டசி தொல்லியல் களம் மோர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மோர்பி நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. [3]


குண்டசி தொல்லியல் களத்தின் அகழாய்வுகளில் முதிர் அரப்பா (கிமு 2200–1900) மற்றும் பிந்தைய அரப்பா (கிமு 1900–1700) காலத்திற்குரிய தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[4] இத்தொல்லியல் களம் மீன்பிடி துறைமுகமாகவும் மற்றும் உற்பத்தி மையமாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. [5]

பரப்பளவு[தொகு]

குண்டசி 2 எக்டேர் பரப்பும், சுற்றுச் சுவருடன் கூடிய நகரமாகவும், சுற்றுச் சுவர் இல்லாத நகர்புறமாக இருந்துள்ளது. [6]சுவரின் மேற்குப் பகுதியில் நீண்ட கல் தளம் பரவப்பட்டிருந்தது. இவ்வமைப்பு பொருட்கள் சேமிக்கும் கிட்டங்கியாகவும், தொழிற்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.[7]

இதன் மையத்தில் தனியார் சமையல் அறைகள் கூடிய அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. குண்டசி நகரத்தின் வடக்கு மற்றும் மேற்குச் சுவர் பகுதிகளில் செவ்வக வடிவிலான குடியிருப்புக் கட்டிடங்கள் இருந்தது. கட்டிடங்களின் அடித்தளம் கற்களாலும், சுவர்கள் சுடப்படாத களிமண் செங்கற்களாலும் அமைக்கபட்டிருந்தது. இதன் செங்கல் அளவுகள் அரப்பா காலத்து போன்று உள்ளது. [8]படகுகளிலிருந்து கரைக்கு பொருட்களை ஏற்றவு; இறக்கவும், கடற்கரையில் மேடை போன்ற அமைப்பு அமைப்பு அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. [3]

குண்டசி நகரத்தின் இரட்டைச் சுவர்கள் 20 மீட்டர் இடைவெளியில் பாதை செல்லுமாறு பாறைக் கற்களாலும், களிமண்ணாலும் கட்டப்பட்டுள்ளது.[9] நகரத்தின் தென்மேற்கு மூலையில் ஒரு கோபுரமும், கிழக்கு திசை நுழைவாயிலில் வாயிற் காவலர்களின் அறையும் கட்டப்பட்டுள்ளது.[10]

கண்டெடுத்த தொல்பொருட்கள்[தொகு]

ஓவியங்களுடன் கூடிய மட்பாண்டங்கள் குண்டசி தொல்லியல் களத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. உருளை வடிவிலான இரண்டு கல் நங்கூரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது[11] செப்புப் புதையல் கொண்ட ஒரு சிறு மட்பாண்டம், செப்பு கை வளையல்கள், இரண்டு விரல் மோதிரங்கள், சோப்புக்கல்லால் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மணிகள் சுடுமண் பொம்மை வண்டிகள், எலும்புகளால் செய்யப்பட்ட கருவிகள், அளவீட்டுக் எடைக் கருவிகள், காதணிகள் கண்டுபிடிகக்ப்பட்டுள்ளது. [3]

முக்கியத்துவம்[தொகு]

சிந்துவெளி நாகரிகத்தின் லோத்தல் தொல்லியல் களம் போன்றதே குண்டசி துறைமுக தொல்லியல் களம்.[12] தங்க நகைகளில் பதிக்கப்படும் பல வண்ணங்கள் கொண்ட ஒளி மிக்க மணிகள் குண்டசியிலிருந்து மெசொப்பொத்தேமியாவிற்கு குண்டசி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்ப்பட்டது. [13] .[14]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. McIntosh, Jane (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, California: ABC-CLIO. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. [1]
 2. Gaur, A.S.and K.H. Vora (10 July 1999). "Ancient shorelines of Gujarat, India, during the Indus civilization (Late Mid-Holocene): A study based on archaeological evidences". Current Science.
 3. 3.0 3.1 3.2 Mehta, Makrand (2009). "Echoes from the Lothal - Harappan Civilization". History of International Trade and Customs Duties in Gujarat. Vadodara: Darshak Itihas Nidhi. பக். 29. இணையக் கணினி நூலக மையம்:439922062. https://books.google.com/books?id=wyc5QwAACAAJ. 
 4. Ray, Niharranjan (gen. ed.) (2000). A Sourcebook of Indian Civilization, Kolkata: Orient Longman, ISBN 81-250-1871-9, p.569
 5. McIntosh, Jane (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, California: ABC-CLIO. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. [2]
 6. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO. Page 220
 7. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO. Page 221
 8. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO. Page 226
 9. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO. Page 224
 10. McIntosh, Jane.(2008) The Ancient Indus Valley, New Perspectives. ABC-CLIO. P 224
 11. Ancient shorelines of Gujarat, India, during the Indus civilization (Late Mid-Holocene): A study based on archaeological evidences by A. S. Gaur and K. H. Vora.Marine Archaeology Centre, National Institute of Oceanography,
 12. McIntosh, Jane (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, California: ABC-CLIO. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. [3]
 13. McIntosh, Jane (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, California: ABC-CLIO. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. [4]
 14. McIntosh, Jane (2008). The Ancient Indus Valley : New Perspectives. Santa Barbara, California: ABC-CLIO. பக். 173. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781576079072. [5]


"https://ta.wikipedia.org/w/index.php?title=குண்டசி_தொல்லியல்_களம்&oldid=3439029" இலிருந்து மீள்விக்கப்பட்டது