உள்ளடக்கத்துக்குச் செல்

சூரத் மாவட்டம்

ஆள்கூறுகள்: 20°55′N 73°03′E / 20.917°N 73.050°E / 20.917; 73.050
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரத் மாவட்டம்
மாவட்டம்
குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டதின் அமைவிடம்
குஜராத் மாநிலத்தில் சூரத் மாவட்டதின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
தலைமையிடம்சூரத்
பரப்பளவு
 • மொத்தம்4,418 km2 (1,706 sq mi)
மக்கள்தொகை
 (2011)[1][2]
 • மொத்தம்60,81,322
 • தரவரிசை12 of 640 in India
2 of 26 in Gujarat
 • அடர்த்தி1,400/km2 (3,600/sq mi)
மொழிகள்
 • Officialகுஜராத்தி மொழி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நெரம்)
வாகனப் பதிவுGJ 05 & GJ 28
இணையதளம்https://surat.nic.in
குஜராத்தின் தென் பகுதியில் சூரத் மாவட்டம்
15-8-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட 7 மாவட்டங்களுடன் குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்

சூரத் மாவட்டம் (Surat district), மேற்கு இந்தியாவில் அமைந்த குசராத்து மாநிலத்தில் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் குஜராத்தின் தெற்கு பகுதியில் அமைந்த கடற்கரை மாவட்டம். இதன் தலைமையிடம் சூரத் நகரம் ஆகும். குஜராத்தின் மிக முன்னேறிய மாவட்டங்களில் இரண்டாம் இடத்தை வகிக்கிறது. 9 வருவாய் வட்டங்களும், 567 கிராமப் பஞ்சாயத்துக்களும் கொண்டது. தாபி ஆறு இம்மாவட்டத்தின் வழியாக பாய்ந்து காம்பத் வளைகுடாவில் கலக்கிறது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகை 60,79,231 ஆக உள்ளது. மாவட்டத்தின் பரப்பளவு 4,418 சதுர கி. மீ., ஆகும். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கி. மீ.,க்கு 1,376 நபர்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 788 பெண்கள் என்ற அளவில் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 86.5% ஆக உள்ளது.[3][4]

மாவட்ட எல்லைகள்[தொகு]

வடக்கில் பரூச் மாவட்டம், நர்மதா மாவட்டம், தெற்கில் நவ்சாரி மாவட்டம், கிழக்கில் தபி மாவட்டம், மேற்கில் காம்பத் வளைகுடா சூரத் மாவட்ட எல்லைகளாக அமைந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் சூரத் மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு தபி மாவட்டம் துவக்கப்பட்டது.

வருவாய் வட்டங்கள்[தொகு]

சூரத் மாவட்டம் ஒன்பது வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. [5]

 1. சோர்யாசி
 2. பாலசனா
 3. மகுவா
 4. மங்கரோல்
 5. காமரேஜ்
 6. மண்டவி
 7. ஒலாபாத்
 8. உமர்பதா
 9. பர்தொலி

பொருளாதாரம்[தொகு]

சூரத் நகரம் வைரங்களுக்கு பட்டைத் தீட்டும் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை நூல்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் கொண்டது. பருத்தி நூல், பால் பொருட்கள் ஆலைகள் கொண்ட மாவட்டம். சூரத் நகரம் அழகிய புடவைகளுக்கு பெயர் பெற்றது.

பார்க்கவேண்டிய இடங்கள்[தொகு]

 • முகமது பின் துக்ளக் கட்டிய கோட்டை, சூரத் நகர்
 • சூடு நீர் ஊற்றுகள், உனாய்
 • அழகிய பர்தொலி, தீத்தல், தண்டி கடற்கரைகள்
 • வன்ஸ்தா தேசியப் பூங்கா

மேற்கோள்கள்[தொகு]

 1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
 2. "Districts of Gujarat".
 3. http://www.census2011.co.in/census/district/206-surat.html
 4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-25. பார்க்கப்பட்ட நாள் 2015-02-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 5. "சூரத் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்". Archived from the original on 2015-06-18. பார்க்கப்பட்ட நாள் 2015-02-21. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்[தொகு]"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரத்_மாவட்டம்&oldid=3555307" இலிருந்து மீள்விக்கப்பட்டது