தைமாபாத்

ஆள்கூறுகள்: 19°30′37″N 74°42′3″E / 19.51028°N 74.70083°E / 19.51028; 74.70083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைமாபாத்
தொல்லியல் களம்
தைமாபாத் is located in மகாராட்டிரம்
தைமாபாத்
தைமாபாத்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தைமாபாத் தொல்லியல் களத்தின் அமைவிடம்
தைமாபாத் is located in இந்தியா
தைமாபாத்
தைமாபாத்
தைமாபாத் (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°30′37″N 74°42′3″E / 19.51028°N 74.70083°E / 19.51028; 74.70083
நாடுஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
மாவட்டம்அகமத்நகர்
மக்கள்தொகை
 • மொத்தம்9
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5.30)

தைமாபாத் (Daimabad) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அகமத்நகர் மாவட்டத்தில், சிறீராம்பூர் வருவாய் வட்டத்தில், கோதாவரி ஆற்றின் துணை ஆறானா பிரவரா ஆறு பாயும் தொல்லியல் களமும், கிராமமும் ஆகும்.[1] இத்தொல்லியல் களத்தை முதலில 1958-இல் பி. ஆர். போபார்திகர் கண்டுபிடித்தார். பின்னர் 1958-59 முதல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் தைமாபாத் தொல்லியல் களத்தை மூன்று முறை அகழ்வாய்வு செய்தது. இறுதியாக 1975-76 மற்றும் 1978-79 ஆண்டுகளிலும் தைமாபாத் தொல்லியல் களத்தை எஸ். ஏ. சாலி தலைமையில் ஆய்வு செய்தனர்.[2] தைமாபாத் தொல்லியல் களத்தின் தொல்பொருட்களை ஆய்வு செய்ததில் அவைகள் தக்காண பீடபூமி வரை பரந்திருந்த பிந்தைய அரப்பா காலப் பண்பாட்டைச் சேர்ந்தது என அறியப்பட்டது.[3][4] தைமாபாத் தொல்லியல் அகழாய்வில் பிந்தைய அரப்பா பண்பாடு[1][2], சவல்தா பண்பாடு[2][5], தைமாபாத் பண்பாடு, மால்வா பண்பாடு மற்றும் ஜோர்வே பண்பாட்டுக் காலங்களின் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இத்தொல்லியல் களத்தில் பிந்தைய அரப்பா பண்பாட்டுக் காலத்திய இரு எருதுகள் இழுக்க, ஒரு மனிதன் ஓட்டும் சிற்பம், 45 செமீ நீளம், 16 செமீ அகலம் கொண்ட வெண்கலத் தேர் சிற்பம் மற்றும் 3 பிற வெண்கலச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.[6]

பிந்தைய அரப்பா பண்பாட்டின் எருது விடுதல் சிற்பம், தைமாபாத்
சிந்துவெளி நாகரிகத்தின் தொல்லியல் களங்களின் வரைபடம்

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

  • Sali, S. A. (1986). Daimabad, 1976-79. New Delhi: Archaeological Survey Of India, Government of India. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தைமாபாத்&oldid=3760387" இருந்து மீள்விக்கப்பட்டது