ஆலம்கீர்பூர்
ஆலம்கீர்பூர் | |
|---|---|
தொல்லியல் களம் | |
| நாடு | இந்தியா |
| மாகாணம் | உத்தரப் பிரதேசம் |
| நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
ஆலம்கீர்பூர் (இந்தி: अलाम्गिरपुर), இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மீரட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொல்லியல் களம். இது சிந்து நதிக் கரையோரத்தில் செழிப்புற்று விளங்கிய சிந்துவெளி நாகரிகத்தின் (கி.மு 3300–1300) ஒரு பகுதி.[1][2] இவ்விடம் சிந்துவெளி நாகரிகப் பகுதியில் கிழக்கு அந்தலையில் உள்ளது.[3][4]
அகழ்வாய்வுகள்
[தொகு]இந்தியத் தொல்லியல் ஆய்வகம் 1958, 1959 ஆம் ஆண்டுகளில் இவ்விடத்தில் ஒரு பகுதி ஆய்வை மேற்கொண்டது.[2] இவ்விடத்தில் ஒவ்வொன்றுக்கும் இடையில் இடைவெளிகளோடுகூடிய நான்கு பண்பாட்டுக் காலப் பகுதிகள் இருப்பதை அகழ்வாய்வு எடுத்துக்காட்டியது. இவற்றுள் காலத்தால் முந்தியது 6 அடி தடிப்புக் கொண்டது. இது அரப்பா நாகரிகக் காலத்துக்குரியது.[5] இப்பகுதியில், சூளையில் சுட்ட செங்கற் தடயங்கள் இருந்தபோதும், இக்காலத்துக்குரிய கட்டிட அமைப்புகள் எதுவும் காணப்படவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டதே அமைப்புகள் கண்டுபிடிக்கப்படாததற்கான காரணமாக இருக்கக்கூடும்.[5] இங்கு கிடைத்த செங்கற்கள், 11.25 அங். முதல் 11.75 அங். வரையிலான நீளமும், 5.25 அங். முதல் 6.25 அங். வரையிலான அகலமும், 2.5 அங். முதல் 2.75 அங் வரையிலான தடிப்பும் கொண்டவை. மிகப்பெரிய செங்கற்கள் 14 அங். x 8 அங். x 4 அங். சராசரி அளவு கொண்டதாகக் காணப்படுகிறது. இக்கற்கள் உலைகளுக்கே பயன்பட்டன.[5]
முக்கியத்துவம்
[தொகு]ஆலம்கிர்பூரில் அரப்பா தொல்லியல் களம் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், இந்தியாவில் சிந்து வெளி நாகரீகத்தின் எல்லை கிழக்கு திசையில் பெருமளவில் விரிவடைந்தது. ஆலம்கிர்பூரின் நான்கு காலகட்டங்கள் முறையே (I) அரப்பா காலம், (II) சாம்பல் வண்ண ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டப் பண்பாடு (III) முற்கால வரலாற்று காலம் மற்றும் (IV) பிற்கால இடைக்கால காலத்தைச் சேர்ந்தவைகள் ஆகும்[6].
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ The Encyclopedia of Indian Archeology, by A. Ghosh.
- ↑ 2.0 2.1 A. Ghosh (ed.). "Excavations at Alamgirpur". Indian Archaeology, A Review (1958-1959). Delhi: Archaeol. Surv. India. pp. 51–52.
- ↑ "Map". Archived from the original on 2006-06-13. Retrieved 2015-07-29.
- ↑ How the 2008 Alamgirpur re-excavation challenged timeline of mighty Harappan Civilisation
- ↑ 5.0 5.1 5.2 India, Archeological Survey of. "India Archeology 1958-59" (PDF). Ed : Amalanada Gosh. Archeological Survey of India. pp. 51–52. Retrieved 3 July 2012.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>குறிச்சொல்;Indian Archaeology, A Review (1958-1959)என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை