கிர் தேசியப் பூங்கா
கிர் காடு தேசிய பூங்கா | |
---|---|
கிர் தேசிய பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிட வரைபடம் | |
அமைவிடம் | கிர்சோம்நாத் மாவட்டம், ஜூனாகாத் மாவட்டம் மற்றும் அம்ரேலி மாவட்டம் |
கிட்டிய நகரம் | சோம்நாத், வேராவல் |
ஆள்கூறுகள் | 21°08′08″N 70°47′48″E / 21.13556°N 70.79667°Eஆள்கூறுகள்: 21°08′08″N 70°47′48″E / 21.13556°N 70.79667°E |
பரப்பளவு | 1,412 km² |
நிறுவப்பட்டது | 1965 |
வருகையாளர்கள் | 60,000 (in 2004) |
நிருவாக அமைப்பு | குஜராத் வனத்துறை |
குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில், உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான, கிர் தேசியப் பூங்கா (Gir National Park) இந்தியாவில் மட்டுமல்லாது ஆசிய அளவில் தனித்தன்மை வாய்ந்தது. [1]
சிங்கங்களின் சரணாலயம்[தொகு]
இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. 1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன. மே 2015 அன்று மேற்கொண்ட் 14வது ஆசியச் சிங்கங்களின் கணக்கெடுப்பின்படி, கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213ஆக உள்ளது.[2]
மற்ற விலங்குகள்[தொகு]
காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவும் இங்கு உள்ளன.
மேற்கோள்கள்[தொகு]