டாங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 20°45′32″N 73°41′19″E / 20.7588°N 73.6886°E / 20.7588; 73.6886
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாங் மாவட்டம் அல்லது தாங் மாவட்டம் (Dang District) (Listen), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று.[1] இதன் தலைமையகம் ஆக்வா நகராகும். மாவட்ட பரப்பளவு 1764 சதுர கி. மீ., மக்கள் தொகை 2,26,769. [2]

இம்மாவட்டம் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாக இந்திய அரசின் திட்டக்குழு அறிவித்துள்ளது.[3] . சபுத்திரா மற்றும் வகாய் முக்கிய நகரங்கள்.

வருவாய் வட்டங்கள்[தொகு]

  1. வகாய்
  2. ஆக்வா
  3. சுபிர்

மக்கள் வகைப்பாடு[தொகு]

2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இம்மாவட்ட மக்கள் தொகை 2,26,769. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கி. மீ., க்கு 129 பேர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள். எழத்தறிவு விகிதம் 76.8%.[2]

பொருளாதாரம்[தொகு]

வறுமை மிக்க இந்திய மாவட்டங்களில் டாங் மாவட்டம் 250 இடத்தில் உள்ளது. பொருளாதாரத்தை மேம்படுத்தி, வறுமையை ஒழிக்க, குசராத் அரசின் நிதியுதவி பெறும் ஆறு மாவட்டங்களில் ஒன்று.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாங் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
  2. 2.0 2.1 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. "Governance in Gujarat Under Modi - A Critique"
  4. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on ஏப்ரல் 5, 2012. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=டாங்_மாவட்டம்&oldid=3930507" இலிருந்து மீள்விக்கப்பட்டது