உள்ளடக்கத்துக்குச் செல்

ராஜ்கோட் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராஜ்கோட் மாவட்டம்
રાજકોટ જિલ્લો
மாவட்டம்
குஜராத் மாநிலத்தில் இராஜ்கோட் மாவட்டத்தின் அமைவிடம்
குஜராத் மாநிலத்தில் இராஜ்கோட் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
இணையதளம்https://rajkot.nic.in
குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்கள்
நௌலகா அரண்மனை, கோண்டல், ராஜ்கோட் மாவட்டம்

ராஜ்கோட் மாவட்டம் (Rajkot district) (குசராத்தி: રાજકોટ જિલ્લો) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத் தலைமையகம் ராஜ்கோட் நகரம். சௌராட்டிர தீபகற்ப பகுதியில் அமைந்துள்ள மாவட்டங்களில் ஒன்று. பிரித்தானிய இந்திய அரசில் ஒரு மன்னராட்சி பகுதியாக விளங்கியது. இதன் பரப்பளவு 11203சதுர கிலோ மீட்டர்.

போக்குவரத்து வசதிகள்

[தொகு]

ராஜ்கோட் விமான நிலையம் மும்பை மற்றும் தில்லி அகமதாபாத் ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கிறது. மாவட்டத்தின் நவலக்கி என்ற சிறு துறைமுகம் கட்ச் வளைகுடாவில் தென்மேற்கில் அமைந்துள்ளது. ராஜ்கோட் நகரம், தேசிய நெடுஞ்சாலை எண் 8ஏ மோர்வியில் உள்ள கண்ட்லா துறைமுகத்தையும், 8பி போர்பந்தர் நகரத்தையும், 8டி ஜூனாகாத் மாவட்டத்தின் ஜெட்பூர் நகரத்தையும் இணைக்கிறது.

இம்மாவட்டத்தின் சில வருவாய் வட்டங்களைக் கொண்டு, 15 ஆகஸ்டு 2013-இல் புதிதாக மோர்பி மாவட்டம் துவக்கப்பட்டது.

மக்கள் பரம்பியல்

[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, ராஜ்கோட் மாவட்டத்தின் மக்கட்தொகை 37,99,770 ஆகும்.[1]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்கோட்_மாவட்டம்&oldid=3890790" இலிருந்து மீள்விக்கப்பட்டது