கொண்டல் நகரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டல்
நகரம்
கொண்டல் நகரக் காட்சி
கொண்டல் நகரக் காட்சி
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India3" does not exist.
ஆள்கூறுகள்: 21°57′29″N 70°47′42″E / 21.958°N 70.795°E / 21.958; 70.795ஆள்கூறுகள்: 21°57′29″N 70°47′42″E / 21.958°N 70.795°E / 21.958; 70.795
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்ராஜ்கோட்
பரப்பளவு
 • மொத்தம்74.48 km2 (28.76 sq mi)
ஏற்றம்132 m (433 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்112,197
 • தரவரிசை30வது
 • அடர்த்தி1,500/km2 (3,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலபேசி குறியீடு எண்02825
வாகனப் பதிவுGJ 03
இணையதளம்www.gondalnagarpalika.org

கொண்டல் (Gondal), இந்தியாவின் மேற்கில் அமைந்த குஜராத் மாநிலத்தின் சௌராட்டிர தீபகற்பத்தில் அமைந்த ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள கொண்டல் கொண்டல் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் கொண்டல் நகரம் கொண்டல் இராச்சியத்தின் தலைநகராக விளங்கியது. இது ராஜ்கோட்டுக்கு தெற்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

கொண்டல் இராச்சிய மன்னர் மகாராஜா பகவத் சிங், ஆண்டு 1911
நௌலாகா அரண்மனை
மணிக்கூண்டு கோபுரம்
கொண்டல் சுவாமி நாராயணன் கோயில்

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 22,624 வீடுகள் கொண்ட கொண்டல் நகரத்தின் மக்கள் தொகை 1,12,197 ஆகும். அதில் ஆண்கள் 58,300 மற்றும் பெண்கள் 53,897 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 924 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12037 (11%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.3% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,143 மற்றும் 842 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.48%, இசுலாமியர் 14.48%, சமணர்கள் 0.73%, கிறித்தவர்கள் 0.17%, மற்றும் பிறர் 0.6% ஆகவுள்ளனர்.[1]

சுவாமி நாராயணன் கோயில், கொண்டல்

பொருளாதாரம்[தொகு]

கொண்டல் நகரத்தின் முதன்மைத் தொழில் நிலக்கடலை பயிரிடுதல் மற்றும் கடலை எண்ணைய் உற்பத்தியாகும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Gondal, India
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டல்_நகரம்&oldid=3519186" இருந்து மீள்விக்கப்பட்டது