உள்ளடக்கத்துக்குச் செல்

திருபாய் அம்பானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருபாய் அம்பானி
2002இல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை
பிறப்புதீரஜ்லால் இராசந்த் அம்பானி
(1932-12-28)28 திசம்பர் 1932
சோர்வாத், ஜுனாகத் அரசு, பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
(present-day குசராத்து, இந்தியா)
இறப்பு6 சூலை 2002(2002-07-06) (அகவை 69)
மும்பை, இந்தியா
பணிதொழிலதிபர்
அமைப்பு(கள்)ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் கேப்பிடல்
ரிலையன்ஸ் பவர்
வாழ்க்கைத்
துணை
கோகிலா திருபாய் அம்பானி
பிள்ளைகள்4, முகேசு அம்பானி மற்றும் அனில் அம்பானி உட்பட
விருதுகள்பத்ம விபூசண் (2016)

தீரஜ்லால் இராசந்த் அம்பானி (Dhirajlal Hirachand Ambani 28 டிசம்பர் 1932 - 6 ஜூலை 2002), பரவலாக திருபாய் அம்பானி என்று அழைக்கப்படும் இவர் , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை நிறுவிய ஓர் இந்திய வணிக அதிபராவார் . 2016 ஆம் ஆண்டில், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான பத்ம விபூசண் இவருக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

திருபாய் அம்பானி 28 டிசம்பர் 1932 அன்று குசராத், ஜுனாகத் மாவட்டம், மாலியா தாலுகாவில் உள்ள சோர்வாடில் பிறந்தார்.[1] ஹிராசந்த் கோர்தன்பாய் அம்பானி மற்றும் மோத் வானியா (பணியா) சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியரான ஜம்னாபென் அம்பானியின் மகன்களில் ஒருவர் ஆவார்.[2] பகதூர் காஞ்சி பள்ளியில் தனது படிப்பைப் பயின்றார்.

1958 ஆம் ஆண்டு ஏடனை விட்டு வெளியேறி, இந்தியாவில் ஜவுளி சந்தை வணிகத்தில் ஈடுபட்டார்.[3]

ரிலையன்ஸ் நிறுவனம்[தொகு]

அம்பானி இந்தியாவிற்குத் திரும்பிய பின்னர் தனது உறவினரும் தன்னுடன் ஏமனில் தங்கியிருந்த சம்பக்லால் தமனியுடன் இணைந்து "மஜின்" நிறுவனத்தைத் தொடங்கினார்.[4] இந்த நிறுவனம் பாலியஸ்டர் நூலை இறக்குமதி செய்து மசாலாப் பொருட்களை யேமனுக்கு ஏற்றுமதி செய்தது.[5]

ரிலையன்ஸ் வணிக நிறுவனத்தின் முதல் அலுவலகம் மஸ்ஜித் பண்டரில் உள்ள நரசிநாத தெருவில் அமைக்கப்பட்டது.[6] அது 350 sq ft (33 m2) ஆக இருந்தது ஒரு தொலைபேசி, ஒரு மேசை மற்றும் மூன்று நாற்காலிகள் கொண்ட அறையாக இருந்தது. துவக்கத்தில், வியாபாரத்தில் இவர்களுக்கு உதவ இரண்டு உதவியாளர்கள் இருந்தனர்.

இறப்பு[தொகு]

சூன் 24, 2002 அன்று பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அம்பானி மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது அவருக்கு ஏற்பட்ட இரண்டாவது பக்கவாதம், முதல் பக்கவாதம் பிப்ரவரி 1986 இல் ஏற்பட்ட போது இவரது வலது கை செயலிழந்தது. ஒரு வாரத்துக்கும் மேலாக ஆழ்மயக்க நிலையில் இருந்த இவர் சூலை 6, 2002 அன்று இறந்தார்.[7][8]

பாராட்டுக்கள்[தொகு]

 • 1996, 1998 மற்றும் 2000 - ஏசியாவீக் இதழின் "பவர் 50-ஆசியாவின் சக்திவாய்ந்த மனிதர்கள்" பட்டியலில் இடம்பெற்றது.
 • சூன் 15, 1998 – தி வார்டன் பள்ளி, பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் டீன் பதக்கம் (தலைமைத்துவத்தின் சிறந்த முன்மாதிரியை அமைத்ததற்காக ). டீன் பதக்கத்தைப் பெற்ற முதல் இந்தியர் திருபாய் அம்பானி ஆவார்.[9]
 • நவம்பர் 8, 2000, மும்பை - செம்டெக் அறக்கட்டளை மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் வேர்ல்டு ஆகியவற்றால் "நூற்றாண்டின் நாயகன்" விருது வழங்கப்பட்டது.
 • ஆகஸ்ட் 10, 2001, மும்பை – தி எகனாமிக் டைம்ஸ் விருதுகள் - கூட்டாண்மை சிறப்புக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது.
 • இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு [FICCI] மூலம் திருபாய் அம்பானி "20 ஆம் நூற்றாண்டின் நாயகன்" என்று பெயரிடப்பட்டார்.
 • 28 டிசம்பர் 2002 அன்று திருபாய் அம்பானி இடம்பெற்ற தபால்தலையை இந்திய அஞ்சல் வெளியிட்டது.
 • அக்டோபர் 2011- மரணத்திற்குப் பின் ஏபிஎல்எஃப் குளோபல் ஏசியன் விருதை ஏசியன் பிசினஸ் லீடர்ஷிப் ஃபோரம் விருது நிகழ்வில் வழங்கப்பட்டது.
 • சனவரி 2016- மரணத்திற்குப் பின் நாட்டின் இரண்டாவது உயரிய குடிமகன் விருதான பத்ம விபூசண் வழங்கப்பட்டது.[10]

சான்றுகள்[தொகு]

 1. C.A. Hemant; C. Lodha (2014). A to Z of Entrepreneurship: A to Z of Entrepreneurship (in ஆங்கிலம்). Panchasil Prakashan. p. 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788192373058.
 2. Dhirubhai Ambani.
 3. ambani and sons by hamish mcdonald.
 4. Ambani: From a petrol pump attendant to Reliance owner | Arab News – Saudi Arabia News, Middle East News, Opinion, Economy and more. Arabnews.com (2 November 2012). Retrieved 28 July 2013.
 5. Giridharadas, Anand (15 June 2008). "Indian to the Core, and an Oligarch". The New York Times. https://www.nytimes.com/2008/06/15/business/worldbusiness/15ambani.html?pagewanted=all. 
 6. "Reliance Industries - The Reliance Story". www.ril.com. பார்க்கப்பட்ட நாள் 2019-05-20.
 7. "Reliance chairman Dhirubhai Ambani dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. (7 July 2002). Retrieved 28 July 2013.
 8. "Dhirubhai, R.I.P". outlookindia.com (in ஆங்கிலம்). 2022-02-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
 9. Diwanji, A. K. (June 1998) Dhirubhai Ambani becomes first Indian to get Wharton School Dean's Medal. Rediff
 10. "Padma awards 2016 declared: Anupam Kher, Rajinikanth, Vinod Rai, Sania Mirza honoured among others". DNA. 2016-01-25.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருபாய்_அம்பானி&oldid=3945651" இலிருந்து மீள்விக்கப்பட்டது