பணியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பணியா மக்கள்
1880ல் கோவா பணியா (வணிகர்)
மொழி(கள்)
குஜராத்தி, இந்தி, மார்வாரி, பஞ்சாபி, மராத்தி மற்றும் கொங்கணி [1]

பணியா (Bania) (otherwise known as Baniya, Vani and Vania) நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வட்டித் தொழில், நவதானியங்கள் மற்றும் நறுமணப் பொருட்களை விற்றல், எண்ணெய் பிழிதல் மற்றும் விற்றல் போன்ற வணிகங்களிலும், தொழில்களில் ஈடுபடும் வைசியர் ஆவார். மேற்கு வங்காளத்தில், பணியா எனும் சொல் குறிப்பிட்ட சாதியினரைக் குறிப்பதாக உள்ளது.[2]

தமிழ் நாட்டில் முன்னர் செக்கு மூலம் எண்ணெய் பிழியும் தொழில் செய்வோரையும், எண்ணெய் விற்கும் வணிகத்தில் ஈடுபடும் சமூகத்தினரையும் வாணியர் என்றும், வாணிய செட்டியார் என்றும் அழைப்பர்.[3]

பெயர்க் காரணம்[தொகு]

வைசியர்களை குறிப்பிடும் வணிஜ் அல்லது பணிஜ் எனும் சமசுகிருத வேர்ச் சொல்லிருந்து பணியா எனும் சொல் பிறந்துள்ளது.[4]மேற்கு இந்தியாவில் வணிகத் தொழிலில் ஈடுபடும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை பணியா எனச் சாதி பெயரிட்டு அழைக்கின்றனர். வங்காளத்தில் வட்டித் தொழிலில் புரிபவர்களை பணியா என்று குறிப்பிட்டாலும், குஜராத், இராஜஸ்தான் மகாராட்டிரா, கோவா போன்ற மாநிலங்களில், வணிகத்தில் ஈடுபடும் பணியா என்ற சாதியினர் உள்ளனர்.[2]

புகழ் பெற்ற பணியாக்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gazetteer of the Union Territory Goa, Daman and Diu: district gazetter by Vithal Trimbak Gune, Goa, Daman and Diu (India). Gazetteer Dept, published by Gazetteer Dept., Govt. of the Union Territory of Goa, Daman and Diu, 1979
  2. 2.0 2.1 Schrader, Heiko (1997). Changing financial landscapes in India and Indonesia: sociological aspects of monetization and market integration. LIT Verlag Münster. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-8258-2641-3. https://books.google.com/books?id=8rf7nIIz8ikC&pg=PA68. பார்த்த நாள்: 2012-02-09. 
  3. வாணியன்
  4. Monier-Williams, Monier (1986). A Sanskrit-English dictionary etymologically and philologically arranged with special reference to cognate Indo-European languages (New ed., greatly enl. and improved. ). Delhi: Motilal Banarsidass. பக். 915. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-0065-6. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பணியா&oldid=3722111" இலிருந்து மீள்விக்கப்பட்டது