மார்வாரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்வாரி மொழி (Mārwāṛī; also variously Marvari, Marwadi, Marvadi) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்திலும் அடுத்துள்ள குசராத் மற்றும் பாக்கித்தானின் கிழக்குப் பகுதிகளிலும் பேசப்படும் ஓர் மொழியாகும். 132 இலட்சம் பேர் (1997படி) உரையாடும் இந்த மொழி தேவநாகரி வரியுருவை எழுத்துக்களுக்குப் பயன்படுத்துகிறது. பாக்கித்தானில் பெர்சிய-அராபிக் வரியுரு பயன்படுத்தப்படுகிறது. மார்வாரி மொழியில் 23 வகைகள் உள்ளன. தற்போது இந்த மொழிக்கு அரசு அல்லது கல்வியில் எந்த தகுநிலையும் இல்லை. இதனை அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் சேர்க்க அண்மையில் முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. இராசத்தான் மாநிலம் இந்த இராசத்தானி மொழிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. ஜோத்பூர் பகுதியில் மார்வாரி மொழி பேசுவோர் கூடுதலாக உள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்வாரி_மொழி&oldid=1871283" இருந்து மீள்விக்கப்பட்டது