உள்ளடக்கத்துக்குச் செல்

ஜோத்பூர் மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°16′50″N 73°00′57″E / 26.28056°N 73.01583°E / 26.28056; 73.01583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜோத்பூர் மாவட்டம்
जोधपुर जिला
27°37′N 72°55′E / 27.62°N 72.92°E / 27.62; 72.92 - 26°00′N 73°52′E / 26.00°N 73.87°E / 26.00; 73.87
மாநிலம்இராஜஸ்தான், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜோத்பூர் கோட்டம்
தலைமையகம்ஜோத்பூர்
பரப்பு22,850 km2 (8,820 sq mi)
மக்கட்தொகை3687165 (2011)
மக்கள்தொகை அடர்த்தி161/km2 (420/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை34.30%
படிப்பறிவு65.94
பாலின விகிதம்916
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஜோத்பூர் மாவட்டம் (Jodhpur District) மேற்கு இந்தியாவில் அமைந்துள்ள இராஜஸ்தான் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் ஜோத்பூர் ஆகும். இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதியில் தார் பாலைவனத்தில் அமைந்த இம்மாவட்டம் ஜோத்பூர் கோட்டத்தில் உள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் மக்கள் தொகையில் ஜோத்பூர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.[1]

மார்வார் பகுதியில் வரலாற்று சிறப்பு மிக்க மையமாக ஜோத்பூர் மாவட்டம் திகழ்கிறது. கி பி 6 முதல் 13-வது நூற்றாண்டு முடிய பிரதிகார குல இராஜபுத்திர மன்னர்களின் தலைநகராக ஜோத்பூர் மாவட்டத்தின் பண்டைய மந்தோர் நகரம் விளங்கியது. 15-வது நூற்றாண்டில் ரத்தோர் குல இராஜபுத்திர மன்னர் ராவ் ஜோதா என்பவர் ஜோத்பூர் நகரத்தை நிறுவி, மார்வார் நாட்டின் தலைநகராக்கி, ரத்தோர் அரச மரபினர் 1948-முடிய ஆண்டனர்.

அமைவிடம்

[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் மேற்கு பகுதியில் தார் பாலைவனத்தில் அமைந்த ஜோத்பூர் மாவட்டத்தின் வடக்கில் பிகானேர் மாவட்டம், வடகிழக்கில் நாகவுர் மாவட்டம், தென்கிழக்கிலும், தெற்கிலும் அஜ்மீர் மாவட்டம், தென்மேற்கில் பாலி மாவட்டம், மேற்கிலும், வடமேற்கிலும் ஜெய்சல்மேர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

ஜோத்பூர் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஏழு உட்கோட்டங்களாகவும்; ஜோத்பூர், போபால்காட், பவாடி, லூனி, ஓசியான், பலோடி, பிலாரா, செர்காட், மெந்தர், பாப் மற்றும் பலேஷ்வர் என 11 வருவாய் வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

அனைத்து வருவாய் வட்டங்களும் ஒரு ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டுள்ளது.[3][4] ஜோத்பூர் நகரம் ஒரு மாநகராட்சி மன்றமாகும்.[5] பிலாரா, பலோடி மற்றும் பிபர்நகரம் நகராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[5] இம்மாவட்டத்த்தின் 1,794 கிராமங்கள், 351 ஊராட்சி மன்றங்களின் நிர்வாகத்தில் இயங்குகிறது.

அரசியல்

[தொகு]

ஜோத்பூர் மாவட்டம் பலோடி, லோகாவாட், செர்கர், சர்தார்புரா, ஜோத்பூர், லூனி, சூர்சாகர், பொக்ரான் என எட்டு சட்டமன்றத் தொகுதிகளையும்; ஜோத்பூர் மக்களவைத் தொகுதியும் கொண்டது.

பொருளாதாரம்

[தொகு]

சுற்றுலாத் துறை

[தொகு]

ஜோத்பூர் நகரம் நீல நிற நகரம் என்றும் சூரிய நகரம் என்றும் பெருமையாக அழைக்கப்படுகிறது. இங்குள்ள அழகிய பெரும் கோட்டைகளும், அரண்மனைகளும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் உள்ளது. தார் பாலைவனத்தில் நடக்கும் ஒட்டகத் திருவிழா உலகப் புகழ் பெற்றது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 3,687,165 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 65.70% மக்களும்; நகரப்புறங்களில் 34.30% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி 27.74% விகிதம் ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 1,923,928 ஆண்களும்; 1,763,237 பெண்களும் உள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு 916 பெண்கள் என்ற விகிதத்தில் பாலின விகிதம் உள்ளது. 22,850 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 161 மக்கள் வீதம் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 65.94% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 78.95% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 51.83% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 606,490 ஆக உள்ளது. [6]

சமயம்

[தொகு]

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 3,224,399 (87.45 %) ஆகவும்; இசுலாமிய சமய மக்கள் தொகை 411,55% (11.16 %) ஆகவும்; சமண சமய மக்கள் தொகை 36,697 (1.00 %) ஆகவும்; சீக்கிய, கிறித்தவ, பௌத்த சமய மக்கள் தொகை மிகக் குறைவாகவும் உள்ளது.

மொழிகள்

[தொகு]

இராஜஸ்தான் மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் இராச்சசுத்தானி, மார்வாரி போன்ற வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  2. "Administrative Setup". Jodhpur District. Archived from the original on 13 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. "Reports of National Panchayat Directory: Block Panchayats of Jodhpur, Rajasthan". Ministry of Panchayati Raj, Government of India. Archived from the original on 2011-11-13. பார்க்கப்பட்ட நாள் 2016-04-25.
  4. "Map:Jodhpur District, Administrative Setup". Jodhpur District. 2007. Archived from the original on 9 ஏப்ரல் 2009. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archivedate= (help)
  5. 5.0 5.1 "Reports of National Panchayat Directory: Report on Urban Local Bodies". Ministry of Panchayati Raj, Government of India. Archived from the original on 13 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  6. District : Census 2011 data[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோத்பூர்_மாவட்டம்&oldid=3930485" இலிருந்து மீள்விக்கப்பட்டது