வாணியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வாணியர் 
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தெலிகுலா, பணியா

வாணியர் (Vaniyar) அல்லது வாணிய செட்டியார் (Vania Chettiar) எனப்படுவோர், தமிழ்நாட்டில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1] தமிழகத்தில், வாணிய செட்டியார்கள் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு வேறுபட்ட மொழியியல் குழுக்களாக வாழுகின்றனர். தெலுங்கு பேசும் வாணிய செட்டியார்கள் தெலிகுலா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் செக்கு மூலம் எண்ணெய் வித்துக்களை ஆட்டி, எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

உட்பிரிவு

  • எண்ணெய் வாணியன்
  • உப்பு வாணிகர்
  • தேல் வாணிகர்
  • கல்வாணியர்[2]

மேற்கோள்கள்

  1. "List of Backward Classes approved by Government of Tamil Nadu".
  2. Cāṉṟōrkula marapukāttal
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியர்&oldid=3312394" இலிருந்து மீள்விக்கப்பட்டது