வைசியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வைசியர் எனப்படுவது , பண்டைக்கால வட இந்தியா வில் வழங்கிவந்த வருணம் எனப்பட்ட, படிநிலை இயல்பு கொண்ட நான்கு சமூகப் பிரிவுகளுள் ஒன்றாகும். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் வகுப்புக்களை உள்ளடக்கிய இவ் வருணப் படிநிலை அமைப்பில் வைசியர் மூன்றாம் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். வணிகரும், கைவினைஞரும் இவ்வகுப்பில் அடங்கியிருந்தனர். இம் முறையில் சூத்திரர் தவிர்ந்த ஏனைய வகுப்பினர் இருபிறப்பாளர் எனப்பட்டனர். இவர்கள் வேதக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கான தொடக்கமாகக் கருதப்படும் பூணூல் அணியும் சடங்குக்கு உரிமை கொண்டிருந்தவர்கள் .

சொற்பிறப்பு[தொகு]

வைசியர் என்னும் சொல் வாழ்தல் எனப்பொருள்படும் விஷ் என்னும் சமக்கிருத வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. அண்டம் என்னும் பொருள்தரும் விஷ்வ என்னும் வட இந்திய மொழிகளில் காணும் சொல்லும் இதே அடியைக் கொண்டதே. இலத்தீன் சொல்லான வில்லா (villa), கிரீனிச் (Greenwich) போன்ற இடப் பெயர்களில் காணப்படும் wich ஆகியனவும் இதே போன்ற வேரை உடையனவே.

வைசிய வழிமுறை[தொகு]

மேற் கண்ட ஒவ்வொரு வகுப்பினரும் தமக்கு உரிய வழிகளில் தமது மனத்தை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் என பண்டைய இந்து நூல்கள் குறிப்பிடுகின்றன. இதன்படி வைசியர் தொழில்முறை அறிவு சார்ந்த வழிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள் எனப்பட்டது . இயற்பியல், வேதியியல், தொழில் நுட்பம், சட்டம், பொருளியல், மேலாண்மை முதலியன வைசிய வழிமுறைக்குள் அடங்குவன.

இவ் வருணத்துக்கு உரிய நிறம் மஞ்சள். இது தரத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. மனுஸ்மிருதி எனப்படும் தொன்மையான நூல் வைசியர்கள் பிரம்மாவின் வயிற்றுப் பகுதியில் இருந்து தோன்றியவர்கள் என்கிறது. வட இந்தியாவில் வழங்கும் பெயர்களான குப்தா, பூதி, அகர்வால், கார்க் என்பன வைசிய மரபுக்கு உரியனவாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வைசியர்&oldid=1350866" இருந்து மீள்விக்கப்பட்டது