வேர்ச் சொல்
Appearance
(வேர்ச்சொல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வேர்ச் சொல் என்பது ஒரு சொல்லில் அடிப்படையாக அமைந்துள்ள அதன் பகுதியாகும். ஒரு மொழியில் ஒலியன் அடிப்படையில் தொடர்புள்ளனவும், பொருட் தொடர்புகளைக் கொண்டனவுமான பல சொற்கள் காணப்படுகின்றன. இவை அனைத்துக்கும் பொதுமையாக அமைந்திருப்பனவே வேர்ச் சொற்கள் ஆகும்.[1][2][3]
எடுத்துக் காட்டாக வளை, வளையம், வளையல், வடை, வட்டம், வட்டு, வட்டில், வடம் போன்ற சொற்கள் அனைத்துக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது வள் என்பதாகும். எனவே இச் சொற்களின் வேர்ச்சொல் வள் ஆகும்.
வேர்ச் சொற்களுடன் ஒட்டுக்கள் சேரும்போது பல்வேறு சொற்கள் உருவாகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Katamba, Francis (2006). Morphology (2nd ed.). Houndsmills, Basingstoke, Hampshire: Palgrave Macmillan. p. 42. ISBN 9781403916440.
- ↑ "Root". Glossary of Linguistic Terms (in ஆங்கிலம்). 3 December 2015.
- ↑ Kemmer, Suzanne. "Words in English: Structure". Words in English. Retrieved 26 December 2018.