கோத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குஜராத்தின் பஞ்சமகால் மாவட்டம்

கோத்ரா, குசராத்து மாநிலத்தின் பஞ்சமகால் மாவட்டத்தின் நிர்வாகத் தலைநகராகும். கோத்ரா நகரம் ஒரு நகராட்சிப் பகுதியாகும்.

கோத்ரா பெயர் வரலாறு[தொகு]

சமசுகிருத மொழியில் `கோ` என்பதற்கு `பசு` என்றும், தாரா என்பதற்கு `நிலம்` என்றும் பொருள். இந்நகரம், பசுக்களின் நகரம் என்று பொருள்படும்படியாக உள்ளது.

முதன்மை கோயில்கள்[தொகு]

வைணவ சமயத்தவர்களுக்கு நான்கு கோயில்கள் உள்ளது. அதில் இரண்டு ஸ்ரீகிருஷ்ணர் கோயில்களும், சமணர்களுக்குரிய மூலநாயகன் கோயிலும், பகவான் சாந்திநாத் தீர்த்தங்கரர் கோயிலும் உள்ளது.

மக்கட்தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரம்[தொகு]

2011ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, கோத்ரா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,21,852. இதில் ஆண்கள் 52விழுக்காடாகவும், பெண்கள் 48 விழுக்காடாகவும் உள்ளனர். சராசர் கல்வி அறிவு விகிதம், 73 விழுக்காடாக உள்ளது. (இந்திய நாட்டின் சராசரி கல்வி அறிவு பெற்றவர்கள் 59.5 விழுக்காடு உள்ளது). கல்வி அறிவுபெற்ற ஆண்கள் 79.5 ஆகவும், பெண்கள் கல்வி விழுக்காடு 64.5 ஆகவும் உள்ளது.

கோத்ராவில் சமயங்கள்
Religion Percent
இந்து
85%
இசுலாம்
12%
சமணம்
3.4%
பிறர்†
1.6%
Distribution of religions
Includes Sikhs (0.2%), பௌத்தம் (<0.2%).

கோத்ரா நகரின் பெருமைகள்[தொகு]

கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வும், கலவரங்களும்[தொகு]

2002ஆம் ஆண்டில் கோத்ரா தொடருந்து சந்திப்பு நிலையத்தில் நின்றிருந்த சபர்மதி விரைவு தொடருந்தின் பெட்டி எண் ஆறு, சிலரால் எரிக்கப்பட்டதால் பலர் இறந்தும், படுகாயமும் அடைந்தனர். இந்நிகழ்வின் குற்றவழக்கின் தீர்ப்பு 2011ஆம் ஆண்டில் வெளிவந்தது.கோத்ரா தொடருந்து எரிப்பு நிகழ்வினை ஒட்டி, கோத்ரா நகரில் இரு பிரிவினருக்கிடையே பெரும் கலவரம் ஏற்பட்டு இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கில் மாண்டனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோத்ரா&oldid=2970785" இலிருந்து மீள்விக்கப்பட்டது