சௌராட்டிர தீபகற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம்
லோத்தல், அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ நாகரீக சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடம்

சௌராட்டிர தீபகற்பம் அல்லது கத்தியவார் தீபகற்பம் குஜராத் மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சௌராட்டிர தீபகற்பத்தின் எல்லைகளாக, வடக்கே கட்ச் மாவட்டமும், மேற்கே அரேபியன் கடலும், தெற்கிலும், தென்மேற்கிலும் காம்பே வளைகுடாவும், வடமேற்கே கட்ச் வளைகுடாவும் கிழக்கே குசராத்தின் இதர மாவட்டங்களும் அமைந்துள்ளது. இத்தீபகற்ப பகுதியை சௌராட்டிரம் அல்லது கத்தியவார் பகுதி என்றும்; இங்குள்ள மக்கள் சௌராட்டிர மொழி பேசியதால் சௌராஷ்ட்ரீகள் என்றும், தற்போது இங்கு கத்தியவாரி சமூகத்தினர் அதிகம் வாழ்வதால் கத்தியவாரிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.[1]

வரலாறு[தொகு]

அரப்பா மற்றும் மொகெஞ்சதாரோ நாகரீக சின்னங்கள், இத்தீபகற்பத்தில் உள்ள லோத்தல் மற்றும் சோமநாதபுரத்தில் உள்ள பிரபாச பட்டினம் என்ற இடத்தில் கண்டெடுக்கப்பட்டன. கி.மு., மூன்றாம் நூற்றாண்டில் சௌராட்டிர தீபகற்ப பகுதி மௌரியர்களின் ஆட்சியிலிருந்து சக வமிச அரசர்களின் கீழ் வந்தது. குப்தர்களின் காலத்திற்குப் பின் சௌராட்டிர தீபகற்ப பகுதிகள் வல்லபி வம்ச அரசர்களின் கீழ் வந்தது.

இசுலாமிய அரசர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதி பலமுறை உள்ளாயிற்று. கசினி முகமது 1024-இல் சோமநாதபுரம் (குசராத்து), துவாரகை போன்ற இடங்களின் மீது படையெடுத்தார். தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியின் படைத்தலைவர்கள் துவாரகை கிருஷ்ணன் கோயிலையும், சோமநாதபுரம் சிவன் கோயிலையும் தகர்த்தனர். இந்தியாவை ஆண்ட பிரித்தானியர்கள் காலத்தில் இத்தீபகற்பத்தில் 226 சுதேச சமஸ்தானங்கள் இருந்தன. இந்தியா விடுதலை அடைந்த பின்பு அனைத்து சுதேச சமஸ்தானங்கள், சர்தார் வல்லபாய் படேலின் கடும் முயற்சியால் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்து. [2]

மாவட்டங்கள்[தொகு]

15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்

15 ஆகஸ்டு 2013 அன்று துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களில் கிர்சோம்நாத் மாவட்டம், தேவபூமி துவாரகை மாவட்டம், மோர்பி மாவட்டம் மற்றும் போடாட் மாவட்டம் என நான்கு மாவட்டங்கள் சௌராட்டிர தீபகற்பகுதியில் துவக்கப்பட்டது.

 1. கிர்சோம்நாத் மாவட்டம்
 2. தேவபூமி துவாரகை மாவட்டம்
 3. ஜூனாகாத் மாவட்டம்
 4. ராஜ்கோட் மாவட்டம்
 5. பவநகர் மாவட்டம்
 6. ஜாம்நகர் மாவட்டம்
 7. அம்ரேலி மாவட்டம்
 8. போர்பந்தர் மாவட்டம்
 9. சுரேந்திரநகர் மாவட்டம்
 10. போடாட் மாவட்டம்
 11. மோர்பி மாவட்டம்

கனிம வளங்கள்[தொகு]

எரிமலை குழம்பினால் ஆன மணல் கற்கள் 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. கடற்கரை பகுதிகளில் களிமண், சுண்ணாம்பு கற்கள் பரந்து காணப்படுகிறது. [2]

நிலவியல்[தொகு]

சௌராட்டிர தீபகற்ப பகுதி கடல் மட்டத்திலிருந்து 600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கிர்நார் மலைப் பகுதிகள் மட்டும் கடல் மட்டத்திலிந்ருது 3665 அடி உயரத்தில் உள்ளது. சௌராட்டிர தீபகற்பம் வெப்ப மண்டலத்தில் அமைந்துள்ளதால், முட்செடிகளும், மரங்களும் கொண்ட காடுகள் காணப்படுகிறது.

வேளாண்மை[தொகு]

கோதுமை, தினை, நவதானியங்கள், நிலக்கடலை மற்றும் பருத்தி இங்கு விளையும் முதன்மை பயிர்கள்.

பார்க்க வேண்டிய இடங்கள்[தொகு]

 1. சோமநாதபுரம் சிவன் கோயில்
 2. துவாரகாதீசர் கோயில்
 3. கிர் தேசியப் பூங்கா

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2014-07-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 2. 2.0 2.1 http://www.britannica.com/EBchecked/topic/313238/Kathiawar-Peninsula
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌராட்டிர_தீபகற்பம்&oldid=3363026" இருந்து மீள்விக்கப்பட்டது