அசோகர் கல்வெட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசோகரின் கல்வெட்டுக்கள்
Ashoka Lauriya Areraj inscription.jpg
செய்பொருள்மணற்கல், பாறைகள், கல்தூண்கள், கற்பலகைகள்
அளவுதூபி, ரொசெட்டாக் கல்
எழுத்துபிராமி, கரோஷ்டி, கிரேக்கம், அரமேயம்
உருவாக்கம்கிமு 3-ஆம் நூற்றாண்டு
தற்போதைய இடம்இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம்
இந்திய துணைக்கண்டத்தில் அசோகர் நிறுவிய தூபிகள் மற்றும் கல்வெட்டுகளைக் காட்டும் வரைபடம்

அசோகர் கல்வெட்டுக்கள் என்பன பேரரசர் அசோகர் ஆட்சியின் கீழ் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்களைக் குறிக்கும். இவரது கல்வெட்டுக்கள் இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன.[1]

குறிப்பிடத்தக்க கல்வெட்டுக்கள்[தொகு]

இவரது கல்வெட்டுக்களில் குறிப்பிடத்தக்க சில பின்வருமாறு:

 • பதினான்கு பாறை வெட்டுக்கள்
 • கலிங்க பாறை வெட்டுக்கள்
 • சிறு பாறை வெட்டுக்கள்
 • ஏழு தூண் வெட்டுக்கள்
 • சிறு தூண் வெட்டுக்கள்

பதினான்கு பாறை வெட்டுக்கள்[தொகு]

புகழ் பெற்ற பதினான்கு பாறை வெட்டின் ஆறாம் கருத்து மன்னர் மக்களின் பிரச்னைகளை உடனடியாக கவனிப்பதை உணர்த்துகிறது.

"கடவுளுக்குப் பிரியமான மன்னர் பிரியதர்சி இவ்வாறு சொல்கிறார்: 'இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்​பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடை​வது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலை​களைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது."

ஜூனாகத் - கிர்நார் கல்வெட்டுகள்[தொகு]

அசோகரின் ஜூனாகத் கல்வெட்டு

குஜராத் மாநிலத்தில் பிராமி எழுத்திலான மூன்று கல்வெட்டுகள் கிர்நார் மலையிலும் மற்றும் கிர்நார் மலையடிவார நகரமான ஜூனாகத்திலும் காணப்படுகிறது.[2]

தௌலி கல்வெட்டுக்கள்[தொகு]

தௌலி மலையில் பிராமி எழுத்தில் அசோகரின் கல்வெட்டு

ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திலிற்குத் தெற்கில், 8 கிமீ தொலைவில் உள்ள தௌலி மலைப் பகுதியில் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.[3][4] இக்கல்வெட்டுகளில் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் கடைபிடிக்க வேண்டிய துறவற வாழ்க்கை நெறிகள் குறித்தும் மற்றும் அரசு அதிகாரிகளின் நன்னடைத்தைகள் குறித்தும் செதுக்கப்பட்டுள்ளது.

பாக்ராம் கல்வெட்டு[தொகு]

கிரேக்க-அரமேய மொழிகளில் அசோகரின் பாக்ராம் கல்வெட்டு, காபூல் அருங்காட்சியகம்

ஆப்கானிஸ்தான் நாட்டின் பார்வான் மாகாணத்தில் [5]உள்ள பாக்ராம் [6] நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது.

சபாஷ் கார்கி கல்வெட்டு[தொகு]

பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், சபாஷ் கார்கி ஊரில், அசோகர் கரோஷ்டி எழுத்துமுறையில் நிறுவிய கல்வெட்டு உள்ளது.[7][8]

படக்காட்சிகள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. The Edicts of King Asoka
 2. "This excerpt from a new book demolishes Emperor Ashoka’s reputation as a pacifist".
 3. The Edicts of King Asoka
 4. Dhauli edicts
 5. Parwan Province
 6. Bagram
 7. The Edicts of King Ashoka
 8. சபாஷ் கார்கி தொல்லியல் களம்

வெளி இணைப்புகள்[தொகு]