உள்ளடக்கத்துக்குச் செல்

அலகாபாத் தூண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அலகாபாத் தூண்
சிங்க முகத்துடன் கூடிய அசோகரது அலகாபாத் தூண்
ஆள்கூறுகள்25°25′52″N 81°52′30″E / 25.43111°N 81.87500°E / 25.43111; 81.87500
இடம்அலகாபாத், உத்தரப் பிரதேசம், இந்தியா
வகைஸ்தூபி
கட்டுமானப் பொருள்மணற்கல்
அகலம்35 அங்குலங்கள் (0.9 m)[1]
உயரம்35 அடிகள் (10.7 m)[1]
முடிவுற்ற நாள்கி. மு 3-ஆம் நூற்றாண்டு

அலகாபாத் தூண் (Allahabad Pillar) கி மு மூன்றாம் நூற்றாண்டின் மௌரியப் பேரரசர் அசோகர் நிறுவியதாகும். அவர் நிறுவிய பல தூண்களில் அலகாபாத் துண் மணற்கல்லால் ஆனது. இத்தூண் உயரம் 35 அடி உயரமும் 35 அங்குலம் சுற்றளவும் கொண்டது. தூணின் உச்சியில் அமர்ந்த நிலையில் சிங்கம் பொறிக்கப்பட்டுள்ளது.

இத்தூண் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழைமை வாய்ந்த ஸ்தூபி ஆகும். இத்தூணில் அசோகரின் குறிப்புகள்[1]:3 மற்றும் சமுத்திரகுப்தரின் குறிப்புகள் காணப்படுகிறது. [2]

வரலாறு[தொகு]

சிங்கத் தலையுடன் அலகாபாத் தூண்

அலகாபாத் தூண் என அழக்கப்படும் இத்தூண் முதலில் கோசல நாட்டின் தலைநகரம் கௌசாம்பியில் அசோகரால் கி மு மூன்றாம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. பின்னர் இத்தூணை கௌசாம்பிலிருந்து பிரயாகை எஎன்றழைக்கபட்ட அலகாபாத்தில், அக்பர் 1583-இல் கட்டிய அலகாபாத் கோட்டையில் ஜஹாங்கீரால் 1605-இல் மாற்றி நிறுவப்பட்டது. [3][1]

18-ஆம் நூற்றாண்டின் அலகாபாத் தூண்

உருவ வழிபாடு வெறுத்த இசுலாமியர்களால் பலமுறை இந்த தூண் சிதைக்கப்பட்டது.[4]:968 13-ஆம் நூற்றாண்டில் இத்தூண் மறுசீரமைக்கப்பட்டது. [4] இத்தூண் மொகலாய பேரரசன் ஜஹாங்கீர் காலத்தில் 1605-ஆம் ஆண்டில் மறுசீரமைத்து, அதில் தனது முன்னோர்களின் பெயர்களை பொரித்தார் [1] 1838-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது ஆங்கிலேயே பொறியாளர் கேப்டன் எட்வர்டு ஸ்மித் என்பவரால் அலகாபாத்தின் அசோகரது தூண் மீண்டும் மறுசீரமைக்கப்பட்டு, புது சிங்க முகங்கள் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டது.

கல்வெட்டுகள்[தொகு]

1834-ஆம் ஆண்டில் ஆசியச் சமூக சங்கத்தைச் சார்ந்த ஜேம்ஸ் பிரின்ஸ்சப் என்பவர், அலகாபாத் கோட்டையின் அசோகரது தூணில் இருந்த குறிப்புகள் கடும் வெயிலாலும், மழையாலும், பனியாலும் உருக்குலைந்திருந்ததை குறிப்பெடுத்துள்ளார். [5][6]

இத்தூணில் அசோகர், சமுத்திரகுப்தர் மற்றும் ஜஹாங்கீர் போன்ற மூன்று பேரரசர்களின் குறிப்புகள் காணப்படுகிறது. ஆங்கிலேயே தொல்லியலாளர் அலெக்சாண்டர் கன்னிங்காமனின் கூற்றுப்படி, இத்தூண்கள் சமுத்திரகுப்தர் காலத்தில் கி பி நான்காம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக அறிய முடிகிறது. இத்தூணில் சமுத்திரகுப்தரின் வெற்றிகள் குறிக்கப்பட்டுள்ளது.

அசோகரின் கல்வெட்டு[தொகு]

பிராமி எழுத்தில் அசோகரது ஆணைகள்
இந்தியாவில் அசோகரது தூண்கள் மற்றும் கல்வெட்டுக் குறிப்புகள் அமைந்த இடங்கள்

அலகாபாத் தூணில் உள்ள அசோகர் கல்வெட்டுக்கள் (மற்ற இடங்களில் உள்ள கல்வெட்டுகளுடன்) தி ஆசியச் சமூகத்தின் ஜேம்ஸ் பிரின்செப் என்பவரால் பிராமி எழுத்துக்களை படித்தறிந்ததில் முக்கியமானது. இது மௌரியப் பேரரசரின் மறுகண்டுபிடிப்புக்கும் அவரது பேரரசின் முழு அளவையும் கண்டறியவும் வழிவகுத்தது.[4][7][8]

கல்வெட்டு பிராமியில் நெடுவரிசையாக சுற்றி தொடர்ச்சியாக பொறிக்கப்பட்டுள்ளது. இது அசோகனின் மற்ற தூண்களில் காணக்கூடிய அதே ஆறு கட்டளைகளைக் கொண்டுள்ளது. அசோகர் காலத்திலிருந்து எஞ்சியிருக்கும் கல்வெட்டுகளில் "ஒரே அளவில், சுத்தமாகவும், ஆழமாகவும் பொறிக்கப்பட்டவை" இவை என்பதை கன்னிங்ஹாம் கவனித்தார்.[9]

முதன்மை தூண் ஆணைகள் 1-6[தொகு]

இந்தத் தூணில் அசோகரின் ஒன்று முதல் ஆறு வரையிலான அசோகரின் கட்டளைகள் உள்ளன. முதல் மற்றும் இரண்டாவது அரசாணைகள் முழுமையாக எஞ்சியிருக்கின்றன. இருப்பினும், மூன்றாவது மற்றும் நான்காவது ஆணைகளில் பெரும்பாலானவை "புகழ்பெற்ற கல்வெட்டைச் செதுக்கி ஜஹாங்கீரின் தேவையற்ற கல்வெட்டாக அவரது முன்னோர்களின் பெயர்களைப் பதிவுசெய்ததன் மூலம் இரக்கமின்றி அழிக்கப்பட்டன".[9] ஐந்தாவது ஆணையின் இரண்டு வரிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. மற்றவை தூணின் மேற்பரப்பு அரிக்கபட்டதால் அழிந்தன. ஆறாவது பாதி வரி இழப்புடன் கிட்டத்தட்ட கல்வெட்டு முடிந்தது. இந்தக் கல்வெட்டுகள் அசோகன் மற்ற தூண்களில் காணப்படுவது போலவே உள்ளன. ஆறு கட்டளைகளைத் தவிர, அலகாபாத் தூணில் பிளவு ஆணை, ராணியின் ஆணை மற்றும் பீர்பல் மகா மேளா கல்வெட்டு என அறியப்படுபவையும் அடங்கும்.[9]

பிளவு ஆணை[தொகு]

அசோகரின் அலகாபாத் தூணில் உள்ள பிளவு மற்றும் அரசியின் கல்வெட்டுகள்

கன்னிங்காமால் கௌசாம்பி ஆணை என்று குறிப்பிடப்படும் பிளவு ஆணையானது, பேரரசர் கோசாம்பியின் மூத்த அதிகாரிகளிடம் (மகாமாத்திராக்கள்) கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து ஒற்றுமையாக இருக்குமாறு வலியுறுத்தினதியது ஆகும். பின்வரும் அரசாணையின் பல்வேறு துண்டு துண்டான பதிப்புகளின் கலவையாகும்:

தேவர் பிரியன் (இங்ஙனம் கூறுகிறான். ......) பாட (லிபுரத்திலுள்ள மகாமாத்திரரும் மற்ற மாகாணங்களிலுள்ள மகாமாத்திரரும் இவ்விதம் கட்டளையிடப்படுகிறார்கள்.):

ஒன்றாயுள்ள சங்கத்தில் பிளவுகளைச் செய்தல் கூடாது. ஏதாவது பிக்ஷு அல்லது பிக்ஷணி சங்கத்தைப் பிளவு செய்வாராயின் அவரை வெள்ளை ஆடை அணியச் செய்து மற்றவரோடு சேராமல் தனியாக வசிக்கச் செய்வோம். இக்கட்டளை பிக்ஷு சங்கங்களுக்கும் பிக்ஷணி சங்கங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்கிறேன்.

தேவர் பிரியன் இவ்விதம் கூறுகிறான். இந்த லிகிதத்தின் ஒரு நகல் நமது உபயோகத் துக்காக உம்முடைய கார்யாலயத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மற்றொரு நகல் உபாஸகருக்கு உபயோகமாகும் பொருட்டு அவர் (வீடுகளுக்கு) அருகில் எழுதவேண்டும். உபோஸத தினந்தோறும் (நோன்பு நாட்கள்தோறும்) எல்லா மகாமாத்திரரும் இந்நோன்பு நாட்களில் நடைபெறும் உபோலதச் சடங்கின்போது வந்திருந்து இவ்வாணையைக் கேட்டு உணர்ந்து, இதை மற்றோருக்கும் ஆக்ஞாபிக்க வேண்டும். உமது எல்லைக்குட்பட்ட எல்லா ஊர்களுக்கும் பிரதேசங்களுக்கும் நீர் இவ்வுத்தரவின்படி (ஆசாரவேறுபாடுடையோரை) நீக்குதல் வேண் டும். கோட்டை நகரங்களிலும் நாடுகளிலும் எங்கும் இதுபோலவே நீக்குதல் நடைபெற வேண்டும்.[10][11]

அரசியின் ஆணை[தொகு]

அசோகரின் மனைவி கருவாகியின் (Karuvaki) அறச் செயல்கள் குறித்து இத்தூணில் செதுக்கப்பட்டுள்ளது.[12][13]

தேவர் பிரியன் கட்டளைப்படி எல்லா இடங்களிலுமுள்ள மகாமாத்திரருக்கு இவ்வாறு தெரியப்படுத்துகிறோம். இரண்டாவது ராணியால் செய்யப்பட்ட எல்லா நன்கொடைகளையும், மாந்தோட்டம், உத்தியானவனம், சத்திரம், அல்லது வேறு எவ்விஷயமாயினும் சரி அவற்றை, அத்தேவியினது தானமென்று கணிப்பது அவசியம். தீவரன் தாயும் இரண்டாவது ராணியுமாகிய காருவாகி செய்யும் காரியங்கள் இவை.[10] [10][14]

சமுத்திரகுப்தரின் கல்வெட்டுகள்[தொகு]

அசோகர் நிறுவிய இத்தூணில் உள்ள அவரின் கல்வெட்டுகளுகளைத் தொடர்ந்து, சமுத்திர குப்தரின் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. கி பி நான்காம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் சமுத்திரகுப்தர் தனது அரசியல் மற்றும் தென்னிந்திய வெற்றிக் குறிப்புகளை சமஸ்கிருதம் மொழியில் செதுக்கபட்டுள்ளது. [2][2] [15] [2][16] இவை சமுத்திர குப்தரின் அரசவையில் இருந்த அரிசேனர் என்ற கவிஞரால் சமசுகிருத்ததில் இயற்றப்பட்டட பாடலாக உள்ளது. இத்தூணில் உள்ள சமுத்திரகுப்தரின் குறிப்புகளின் மூலம் குப்தப் பேரரசு, அதன் அண்டை நாடுகள் மற்றும் புவியியலை அறிய முடிகிறது.[2][15]

பீர்பால் மாக் மேளா கல்வெட்டு[தொகு]

இத்தூணில் உள்ள பீர்பால் மாக் மேளா கல்வெட்டு 16 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியைச் சேர்ந்ததாக உள்ளது.[17]

சம்வத் ஆண்டு 1632, சாகா 1493, மாகாவில், தேய்பிறை 5ஆம் நாள், திங்களன்று, கங்கதாசின் மகன் மகாராஜா பீர்பால் தீர்த்த ராஜ் பிரயாகைக்கு புனித யாத்திரை மேற்கொண்டார்.[17]

16 ஆம் நூற்றாண்டில் இந்துக்களுக்கு பிரயாகை ஒரு குறிப்பிடத்தக்க புனித யாத்திரை தலமாக இருந்துளதும், தீர்த்த ராஜ் - மற்றும் மாகா மாதத்தில் திருவிழா நடத்தப்பட்டது என்பதை உறுதிப்படுத்துவதால் இந்த கல்வெட்டு முக்கியத்துவம் வாய்ந்தது. சம்வத் ஆண்டு 1632 என்பது கி.பி. 1575 க்கு இணையானது, சாகா 1493 கி.பி 1571 க்கு இணை. இவற்றில் ஒன்று எழுத்து பிழை, ஆனால் அந்த பத்தாண்டு துல்லியமானது, ஏனெனில் அப்போது அலகாபாத் அக்பரின் கட்டுப்பாட்டில் இருந்தது மேலும் அங்கு ஒரு பெரிய கோட்டை கட்டப்பட்டது. பீர்பாலும், அக்பரும் அடிக்கடி அலகாபாத்துக்கு சென்றிருப்பதை வரலாற்று ஆவணங்களும் உறுதிப்படுத்துகின்றன.[17][18]

காலப்போக்கில் தூணில் பல சிறிய கல்வெட்டுகள் சேர்க்கப்பட்டதாக கன்னிங்ஹாம் குறிப்பிடுகிறார். இவற்றில் பல கல்வெட்டுகளில் கி.பி. 1319 மற்றும் கி.பி 1397 க்கு இடைப்பட்ட காலத்தவை ஆகும். மேலும் இவற்றில் பெரும்பாலானவை மாகா மாதத்தைச் சேர்ந்தவை. கிருஷ்ணசுவாமி மற்றும் கோஷின் கூற்றுப்படி, இந்த நாட்கள் பண்டைய இந்து நூல்களில் உள்ளபடி, பிரயாகையில் உள்ள மாக் மேளா யாத்திரையுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.[19]

ஜகாங்கீரின் கல்வெட்டு[தொகு]

இதற்கு பிந்தைய பாரசீக மொழிக் கல்வெட்டானது முகலாய பேரரசர் ஜகாங்கீரின் வம்சாவளியைக் குறிக்கிறது. இது மிர் அப்துல்லா முஷ்கின் கலாம் என்பவரால் செதுக்கப்பட்டது. ஜகாங்கீர் அரியணை ஏறுவதற்கு சற்று முன்பு அவர் ஷா சலீமாக இருந்தபோது செதுக்கப்பட்டது.[35] பண்டைய அசோகர் கல்வெட்டின் குறிப்பிடத்தக்க பகுதியை சிதைத்து அதன்மேலே ஜகாங்கீரின் கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றி "இரக்கமின்றி அழிக்கபட்டுவிட்டது" என்று கன்னிங்காம் கூறுகிறார்.[9][20]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 Cunningham, Alexander (1879). Corpus Inscriptionum Indicarum: Inscriptions of Ashoka. Office of the Superintendent of Government Printing. pp. 37–38. பார்க்கப்பட்ட நாள் 30 September 2014.
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 Kulke, Hermann; Rothermund, Dietmar (2010). "A History of India: Samudragupta: "a God whose residence is this world?"". Routledge. Archived from the original on 4 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 1 October 2014.
 3. Krishnaswamy, C.S.; Amalananda Ghosh (October 1935). "A Note on the Allahabad Pillar of Aśoka". The Journal of the Royal Asiatic Society of Great Britain and Ireland 4: 697–706. http://www.jstor.org/stable/25201233. பார்த்த நாள்: 1 October 2014. 
 4. 4.0 4.1 4.2 Prinsep, James (1832). Journal of the Asiatic Society of Bengal. Open Library. pp. 566–609, 953–980. திற நூலக எண் 25456976M.
 5. Allen, Charles (2012). Ashoka: The Search for India's Lost Emperor. Hachette UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1408703882.
 6. James Prinsep (March 1834). "Note on Inscription on the Allahabad Column". Journal of the Asiatic Society of Bengal 3: 114–123. https://books.google.com/books?id=qzwzAQAAMAAJ. 
 7. Kang, Kanwarjit Singh (28 March 2010). "He deciphered India's past". The Tribune. http://www.tribuneindia.com/2010/20100328/spectrum/main2.htm. 
 8. Charry, V Shankar (14 September 2003). "Re-discovering an Emperor". Deccan Herald இம் மூலத்தில் இருந்து 9 அக்டோபர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141009051447/http://archive.deccanherald.com/deccanherald/sep14/at4.asp. 
 9. 9.0 9.1 9.2 9.3 Cunningham 1879, ப. 37–38.
 10. 10.0 10.1 10.2 Thapar, Romila (2012). "Appendix V: A Translation of the Edicts of Aśoka". Aśoka and the Decline of the Mauryas (3rd ed.). New Delhi: Oxford University Press. pp. 388–390. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780198077244. பார்க்கப்பட்ட நாள் 8 February 2016.
 11. ஆர். ராமய்யர், அசோகனுடைய சாஸனங்கள் 1925 நூல், அத்தியாயம்; ஸார்நாத் சாஸனங்கள், பக்கம் 146 விக்கிமூலம்
 12. Bhandarkar, D. R. (1925). Ashoka. Asian Educational Services. p. 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120613333. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
 13. Smith, Vincent Arthur (1920). Ashoka, the Buddhist Emperor of India. Asian Educational Services. pp. 215–219. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120613031.
 14. ஆர். ராமய்யர், அசோகனுடைய சாஸனங்கள் 1925 நூல், அத்தியாயம்; இராணி காருவாகியின் லிகிதம், பக்கம் 152 விக்கிமூலம்
 15. 15.0 15.1 Majumdar, Ramesh Chandra; Altekar, Anant Sadashiv (1967). Vakataka - Gupta Age Circa 200-550 A.D. Motilal Banarsidass Publ. pp. 136–155.
 16. Singh, Upinder (2008). A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century. Pearson Education India. pp. 477–478. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 813171120X. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
 17. 17.0 17.1 17.2 Cunningham 1879, ப. 39.
 18. Krishnaswamy & Ghosh 1935, ப. 698-699.
 19. Krishnaswamy & Ghosh 1935, ப. 702-703.
 20. Prinsep 1834, ப. 114–123.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அலகாபாத்_தூண்&oldid=3592794" இலிருந்து மீள்விக்கப்பட்டது