கோசாம்பி
கோசாம்பி | |
---|---|
பண்டைய நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | கௌசாம்பி மாவட்டம் |
கௌசாம்பி அல்லது கோசாம்பி (Kausambi or Kosambi ) பரத கண்டத்தின் பண்டைய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரம் வேத கால கோசல நாட்டின் தலைநகராக இருந்தது. கௌசாம்பி நகரம், புத்தர் தர்மத்தை உபதேசித்த இடங்களில் ஒன்றாகும்.
அக்பருக்கு முன்னர் பிரயாக்ராஜ் என அழைக்கப்பட்ட இன்றைய அலகாபாத் நகரத்திலிருந்து தென்மேற்கில் 56 கிலோ மீட்டர் தொலைவில் யமுனை ஆற்றாங்கரையில் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ளது. இந்நகரத்தில் அசோகர் நிறுவிய மணற்கல்லால் ஆன அசோகரின் ஸ்தூபி ஒன்றை ஜஹாங்கீர் பெயர்த்தெடுத்து அலகாபாத் கோட்டையில் நிறுவினான்.
வரலாறு
[தொகு]வேதகாலம் முதல் மௌரியப் பேரரசு மற்றும் குப்தப் பேரரசு காலத்தில் கௌசாம்பி நகரம் முக்கிய நகரங்களில் ஒன்றாக விளங்கியது.[1][2] பிற்கால வேத காலத்தின் போது இந்நகரம் சிறப்பு குறைந்த சிறு நகராக விளங்கியது.
வத்ச நாட்டின் தலைநகராக இருந்தது கௌசாம்பி நகரம். புஷ்யமித்திர சுங்கன் பேரரசில், சுங்கப் பேரரசிற்கு கப்பம் செலுத்தும் நாடாக இருந்தது கௌசாம்பியின் வத்ச நாடு. சுங்கப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் பதினாறு மகாஜனபதங்களில் ஒன்றான கௌசாம்பியை தலைநகராகக் கொண்ட வத்சநாடு விளங்கியது.
கௌதம புத்தர் காலத்தின் போது இந்தியாவின் நான்கு திசைகள் கூடுமிடத்தில் அமைந்த கௌசாம்பி நகரம், இந்தியாவின் பெரும் வணிக மையமாக விளங்கியது.
கௌசாம்பி நகரத்தில் 1949 மற்றும் 1951-1952 ஆண்டுகளில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது.[3] கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு சோதனையில், கி மு 390 முதல் கி பி 600 முடிய உள்ள இடைப்பட்ட காலத்தில் கௌசாம்பி நகரம் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. [4]
கௌசாம்பி நகரம் கோட்டைச் சுவர்களால் சூழப்பட்ட ஒழுங்கற்ற நீள்வட்ட அமைப்பு கொண்டதாக இருந்திருக்கிறது. இந்நகரம் 6.5 கி. மீ பரப்பளவு கொண்டிருந்தது.
மௌரியப் பேரரசர் அசோகரின் தூண்களில் ஒன்றான அலகாபாத் தூண் கௌசாம்பில் இருந்தது. இத்தூணை மொகலாய பேரரசன் ஜஹாங்கீரால் அலகாபாத் கோட்டையில் நிறுவப்பட்டது. [5] [6]
படக்காட்சிகள்
[தொகு]கோசாம்பி தொல்லியல் களத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களின் படங்கள்:
-
காளை மாடுகளை பூட்டிய ஏரைக் கொண்டு உழுவோட்டும் பெண்னின் செப்புச் சிற்பம் (கிமு 2000-1750)
-
கோசாம்பியில் உள்ள அசோகரின் தூண்கள்
-
தாமரைப்பூ வேலைப்பாடுகள் கொண்ட அலகாபாத் தூண்
-
கனிஷ்கர் காலத்திய போதிசத்துவரின் சிதைந்த சிற்பம்
-
சுடுமண் சிலைகள்
-
கிமு முதலாம் நூற்றாண்டின் கௌசாம்பி தொல்லியல் களத்தின் செப்பு நாணயம்
-
இருபுறமும் யாணைகளுடன் கூடிய இலக்குமியின் சிற்பம்
தற்கால கௌசாம்பி
[தொகு]இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அலகாபாத் கோட்டத்தில் கௌசாம்பி மாவட்டம் என்ற பெயரில் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- அசோகர் கல்வெட்டுக்களின் பட்டியல்
- அசோகரின் பெரிய தூண் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு தூண் கல்வெட்டுகள்
- அசோகரின் பெரும் பாறைக் கல்வெட்டுக்கள்
- அசோகரின் சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ↑ A. L. Basham (2002). The Wonder That Was India. Rupa and Co. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-283-99257-3.
- ↑ Ariel Glucklich (2008). The Strides of Vishnu. Oxford University Press. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-531405-2.
- ↑ Rohan L. Jayetilleke (2007-12-05). "The Ghositarama of Kaushambi". Daily News (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604160714/http://www.dailynews.lk/2007/12/05/fea06.asp. பார்த்த நாள்: 2008-10-29.
- ↑ S. Kusumgar and M. G. YadavaMunshi Manoharlal Publishers, New Delhi (2002). K. Paddayya (ed.). Recent Studies in Indian Archaeology. pp. 445–451. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-215-0929-7.
- ↑ Romila Thapar (1997). Aśoka and the Decline of the Mauryas. Oxford University Press, New Delhi. pp. 290–291. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564445-X.
- ↑ Vincent Arthur Smith (1992). The Edicts of Aśoka. Munshiram Manoharlal Publishers, New Delhi. p. 37.
மேற்கோள்கள்
[தொகு]- கௌசாம்பி குறித்தான உ பி மாநில இணையதளம் பரணிடப்பட்டது 2016-05-13 at the வந்தவழி இயந்திரம்
- Early history of Kausambi, IIT Delhi archive பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம்
- Entry on Kosambi in the Buddhist Dictionary of Pali Proper Names
- Tripathi, Aruna; The Buddhist Art of Kausambi from 300 BC-AD 550, New Delhi, D.K. Printworld, 2003, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-246-0226-3
வெளி இணைப்புகள்
[தொகு]- கௌசாம்பி மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2016-05-13 at the வந்தவழி இயந்திரம்