யமுனை ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாஜ் மஹாலிலிருந்து யமுனை நதியின் ஒரு தோற்றம்

யமுனை ஆறு வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.

துணை நதிகள்[தொகு]

பெட்வா நதி[தொகு]

மத்தியப் பிரதேச மாநிலம் ஓசங்காபாதுக்கு வடக்கில் உருவாகி, வட கிழக்காகப் பாய்ந்து, மால்வா பீடபூமி வழியாக உத்தரப்பிரதேச மாநிலம் அமீர்பூர் அருகில் யமுனையில் கலக்கிறது பெட்வா நதி.[1]

கென் நதி[தொகு]

கென் நதி மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் அருகில் உருவாகி உத்தரப் பிரதேசம் பதேபூர் அருகில் யமுனையில் கலக்கிறது.[1]


மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "இணைத்(ந்)தாக வேண்டும்!". தினமணி (14 பெப்ரவரி 2014). பார்த்த நாள் 16 பெப்ரவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யமுனை_ஆறு&oldid=1619264" இருந்து மீள்விக்கப்பட்டது