அம்ரோகா மாவட்டம்
அம்ரோகா மாவட்டம் ஜோதிபா புலே நகர் மாவட்டம் ज्योतिबा फुले नगर ज़िला جیوتیبا پھولے نگر ضلع | |
---|---|
அம்ரோகாமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | மொராதாபாத் கோட்டம் |
தலைமையகம் | அம்ரோகா |
பரப்பு | 2,321 km2 (896 sq mi) |
மக்கட்தொகை | 1,499,193 (2001) |
படிப்பறிவு | 50.21 %[1] |
மக்களவைத்தொகுதிகள் | அம்ரோகா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 39. தனவுரா, 40. நவுகாவான், 41. அம்ரோகா, 42. ஹசன்பூர் |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அம்ரோகா மாவட்டம் என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று. இது ஜோதிபா பூலே நகர் மாவட்டம் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. [2] இதன் தலைமையகம் அம்ரோகா நகரில் உள்ளது. சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் இதுவும் ஒன்று. [3] இந்த மாவட்டத்துக்கு ஜோதிபா புலே நகர் மாவட்டம் என்ற பெயரும் உண்டு.
மக்கள்
[தொகு]2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுக்கப்பட்டபோது, 1,838,771 மக்கள் வாழ்ந்தனர். [4] சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 818 பேர் வாழ்கின்றனர். [4] சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 907 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [4] இங்கு வாழ்பவர்களில் 65.7 சதவிகிதம் பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [4]
அரசியல்
[தொகு]இந்த மாவட்டத்தை தனவுரா, நவுகாவான், அம்ரோகா, ஹசன்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளது மாநில அரசு.[5] இந்த மாவட்டம் அம்ரோகா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
சான்றுகள்
[தொகு]- ↑ "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்க்கப்பட்ட நாள் 2010-10-10.
- ↑ "Important Cabinet Decisions". Lucknow: Information and Public Relations Department. Archived from the original on 24 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013.
- ↑ "Press Information Bureau English Releases". Pib.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2012-06-13.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-08.
இணைப்புகள்
[தொகு]