சகாரன்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சகாரன்பூர்
—  நகரம்  —
சகாரன்பூர்
இருப்பிடம்: சகாரன்பூர்
, உத்தரப் பிரதேசம் , இந்தியா
அமைவிடம் 29°58′N 77°33′E / 29.97°N 77.55°E / 29.97; 77.55ஆள்கூறுகள்: 29°58′N 77°33′E / 29.97°N 77.55°E / 29.97; 77.55
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் சகாரன்பூர்
ஆளுநர் இராம் நாயக்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி சகாரன்பூர்
மக்கள் தொகை 12,52,925 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
இணையதளம் saharanpur.nic.in

சகாரன்பூர் (Saharanpur, இந்தி: सहारनपुर, உருது: سهارنپور) வட இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஓரு மாநகராட்சியாகும். இது சகாரன்பூர் மாவட்டத்திற்கும் சகாரன்பூர் கோட்டத்திற்கும் நிர்வாகத் தலைநகராக விளங்குகிறது. அரியானா மற்றும் உத்தராகண்டம் மாநிலங்களின் எல்லையில் பசுமையான வேளாண் விளைநிலங்கள் அமைந்துள்ள பகுதியில் உள்ள சகாரன்பூரின் வரலாறு முகலாயர்களின் காலத்திலிருந்து துவங்குகிறது. இன்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் விரைவாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. உலகளவில் மர வேலைப்பாடு கைவினைப் பொருள்களுக்கு பெயர் பெற்றது. உள்ளூரில் விளையும் , பாசுமதி அரிசி, மாம்பழங்கள் உட்பட, வேளாண் பொருட்களுக்கு சந்தை நகரமாக உள்ளது. வேளாண் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட தொழில்களான சர்க்கரை ஆலைகள், பருத்தி ஆலைகள், காகிதம் மற்றும் வெண்சுருட்டு தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன.

புவியியல் இருப்பு[தொகு]

சகாரன்பூர் 29°58′N 77°33′E / 29.97°N 77.55°E / 29.97; 77.55,[1] சண்டிகரிலிருந்து தெற்கு-தென்மேற்கு திசையில் 140 கிலோமீட்டர்கள் (87 mi) தொலைவிலும் தில்லியிலிருந்து வடமேற்கில் 170 கிலோமீட்டர்கள் (110 mi) தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 269 மீட்டர்கள் (883 ft) ஆகும்.

மக்கள்தொகையியல்[தொகு]

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சகாரன்பூரின் மக்கள்தொகை 1,252,925 ஆகும். ஆடவர் 53% ஆகவும் மகளிர் 47%.ஆகவும் உள்ளனர். இங்குள்ள படிப்பறிவு தேசிய சராசரியான 50.5%ஐ விட கூடுதலாக 78%ஆக உள்ளது. ஆண்கள் படிப்பறிவு: 88%, பெண்கள் படிப்பறிவு:70% ஆறு அகவைக்கும் குறைவான வயதுடையோர் மொத்த மக்கள்தொகையில் 14%ஆக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Falling Rain Genomics, Inc – Saharanpur

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சகாரன்பூர்&oldid=3366833" இருந்து மீள்விக்கப்பட்டது