மேற்கு உத்தரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரிபோலி, பிராஜ் பாஷா, அவதி மொழி, போஜ்புரி மொழி, புந்தேலி மொழி, பாகேலி மொழி மற்றும் கன்னோசி மொழிகள் பேசும் பகுதிகளின் வரைபடம்

மேற்கு உத்தரப் பிரதேசம் (Western Uttar Pradesh) இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களைக் கொண்டது. மேற்கு உத்தரப் பிரதேசம் ரோகில்கண்ட், கன்னோசி மற்றும் விரஜபூமி பிரதேசங்களைக் கொண்டது. இப்பிரதேசங்களில் கரிபோலி மற்றும் பிராஜ் பாஷா மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. இதன் கிழக்கில் அவத் பிரதேசம், தூரக் கிழக்கில் பூர்வாஞ்சல் பிரதேசம், தெற்கில் புந்தேல்கண்ட் பிரதேசம் அமைந்துள்ளது.

இப்பகுதியின் மக்கள பண்பாடு, நாகரீகம் மற்றும் பொருளாதாரம் உத்தரபிரதேசத்தின் பிற பகுதிகளிலிருந்து வேறுபட்டவை உள்ளது. ஆனால் அரியானா மற்றும் கிழக்கு மற்றும் தென்கிழக்கு இராஜஸ்தான் மக்களுடன் மிகவும் நெருக்கமாக ஒத்துள்ளது.[1][2]

அரியானா மற்றும் பஞ்சாப் போன்று மேற்கு உத்தரப் பிரதேசம் பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறியுள்ளது. தில்லிக்கு அருகில் அமைந்த இப்பகுதியின் நொய்டா நகரம் பெரிய பொருளாதார சிறப்பு மண்டலம் ஆகும். மேற்கு உத்தரப் பிரதேசத்தின் பெரிய நகரம் காசியாபாத் நகரம் ஆகும். இப்பகுதியில் கிருஷ்ண ஜென்மபூமி, தாஜ் மகால், ஆக்ரா கோட்டை, பத்தேப்பூர் சிக்ரி போன்ற புகழ்பெற்ற ஆன்மீக, வரலாற்றுச் சுற்றுலாத்தளங்கள் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

மேற்கு உத்தர்ப்பிரதேசத்தின் சமயங்கள்
சமயம் %
இந்து சமயம்
72.29%
இசுலாமியர்
26.21%
பிறர்†
1.41%
Distribution of religions
சீக்கியர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், சமணர்கள் உள்பட[3]
கரிபோலி பிரதேசத்தின் சமயங்கள்
Religion Percent
இந்துக்கள்
59.19%
இசுலாமியர்கள்
39.17%
பிறர்†
1.64%
விரஜபூமி பிரதேசத்தின் சமயங்கள்
Religion Percent
இந்து சமயம்
82.78%
இசுலாமியர்கள்
16.00%
பிறர்†
1.22%

மேற்கு உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையாக ஜாட் இன மக்கள், இராசபுத்திரர்கள், காயஸ்தர்கள், தியாகி பிராமணர்கள், அகிர் யாதவர்கள், குர்மி மக்கள், கட்சி மக்கள், குயவர்கள், பணியாக்கள், வால்மீகி இன மக்கள், குஜ்ஜர், ஜாதவ் மக்கள் மற்றும் ரோகில்லா பஷ்தூன் மக்கள்[4]

மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகையில் தியாகிகள் உள்ளிட்ட பிராமணர்கள் 17% ஆக உள்ளனர்.[5]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகை 7,12,17,132 ஆகும் அதில் இந்துக்கள் 72.29% மற்றும் இசுலாமியர்கள் 26.21% ஆக உள்ளனர்.[3]கரிபோலி பேசுபவர்கள் 29,669,035, (அதில் இந்துக்கள் 59.19% மற்றும் இசுலாமியர் 39.17%) மற்றும் பிராஜ் பாஷா பேசுபவர்கள் 29,754,755 (அதில் இந்துக்கள் 82.78% மற்றும் இசுலாமியர் 16%). மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சகரன்பூர் மாவட்டம், முசாபர்நகர் மாவட்டம், பிஜ்னோர் மாவட்டம், மொராதாபாத் மாவட்டம், ராம்பூர் மாவட்டம், மீரட் மாவட்டம், அம்ரோகா மாவட்டம் மற்றும் பரேலி மாவட்டம் என எட்டு மாவட்டங்களில் இசுலாமிய மக்கள் 1951-இல் 29.93% இருந்தனர். 2011-இல் முஸ்லீம் மக்கள் தொகை வளர்ச்சி அடைந்து 40.43% ஆக உள்ளது.

ஒட்டு மொத்த உத்தரப் பிரதேச மாநிலத்தின் இசுலாமிய மக்கள் தொகை 19.3% ஆகும் ஆனால் மேற்கு உத்தர்பிரதேசத்தில் மட்டும் இசுலாமிய மக்கள் தொகை 26%க்கும் சற்று குறைவாக உள்ளது.[6][7] 2012 உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், மேற்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள 77 சட்டமன்றத் தொதிகளில், 26 தொகுதிகளில் இசுலாமிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.[8] Several communities are bi-religious.[9]

மேற்கு உத்தரப்பிரதேசத்தின் ரோகில்கண்ட் பிரதேசத்தில் பல நூற்றாண்டுகளாக உருது மொழி பேசும் ஆப்கானிய ரோகில்லாக்கள் பெருமளவில் வாழ்கின்றனர்.[10]இந்தியப் பிரிவினையின் போதுபாகிஸ்தான் பஞ்சாப் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்த சீக்கியர்கள் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் பெருமளவில் வாழ்கின்றனர்.[11]

இந்தியாவில் நடைபெறும் ஆணவக் கொலைகளில் 30% மேற்கு உத்தரப்பிரதேசத்தில் நிகழ்கிரது.[12]

புவியியல்[தொகு]

மேற்கு உத்தரப்பிரதேசம் தனது எல்லைகளை உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், அரியானா, தில்லி, இராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்கிறது. மேலும் வ்டகிழக்கில் நேபாளம் நாட்டுடனும் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இப்பகுதியில் கங்கை ஆறு மற்றும் யமுனை ஆறுகள் பாய்கிறது. இப்பகுதியில் மண் வளம் கொண்ட தோவாப் நிலப்பகுதி உள்ளது. இப்பகுதியில் முக்கிய நகரங்கள் பாக்பத், பரேலி, ஆக்ரா, மதுரா, மொராதாபாத், சம்பல், காசியாபாத், நொய்டா, மீரட், சகாரன்பூர், அலிகார், முசாபர்நகர், ராம்பூர், ஷாஜகான்பூர், இட்டாவா, பிரோசாபாத், மைன்புரி, சாம்லி, பரூக்காபாத் ஆகும்.

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மேற்கு உத்தரப்பிரதேசம் மீரட் கோட்டம், சகாரன்பூர் கோட்டம், மொராதாபாத் கோட்டம், பரேலி கோட்டம், ஆக்ரா கோட்டம், அலிகார் கோட்டம் என 6 வருவாய் கோட்டங்களையும், 26 மாவட்டங்களையும் கொண்டது.

மாவட்டங்கள்[தொகு]

சாலைப் போக்குவரத்து[தொகு]

மேற்கு உத்தரப்பிரதேசப் பகுதியில் தேசிய நெடுன்சாலைகள் எண் 2, 3, 11, 24, 58, 73, 74, 87, 91 119 235, 709ஏ, 709பி, 709 ஏடி செல்கிறது. மேலும் கீழ்கண்ட விரைவுச் சாலைகளும் இதன் வழியாகச் செல்கிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Murray J. Leaf (1998). Pragmatism and development: the prospect for pluralist transformation in the Third World. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0897895736. ... Village organization and district administration in western Uttar Pradesh is generally much more like the neighboring states of Rajasthan and Haryana than like eastern Uttar Pradesh. Eastern Uttar Pradesh is more like Bihar than western Uttar Pradesh ... Of all these regions, western Uttar Pradesh is generally regarded as having the best administration, the most productive agriculture, and the best managed canals ...
 2. Alfred De Souza (1983), Urban growth and urban planning: political context and people's priorities, Indian Social Institute, 1983, ... The difference in the urban settlement pattern between western and eastern Uttar Pradesh is so pronounced that one could almost feel that the two regions were located in two different countries with completely different economic systems ...
 3. 3.0 3.1 http://censusindia.gov.in/
 4. "भाजपा को बड़ा झटका: यूपी का सबसे बड़ा वोट बैंक भाजपा के खिलाफ करेगा मतदान". www.patrika.com (in இந்தி). 15 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-03-27.
 5. "भाजपा को बड़ा झटका: यूपी का सबसे बड़ा वोट बैंक भाजपा के खिलाफ करेगा मतदान". www.patrika.com (in இந்தி). 15 July 2016. பார்க்கப்பட்ட நாள் 2019-10-15.
 6. "Minister's demand for Muslim Pradesh condemned", தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, 2006-07-19, archived from the original on 2012-10-24, பார்க்கப்பட்ட நாள் 2009-07-24, "... demand is neither feasible nor proper," said Manzoor Ahmad, former vice-chancellor of Dr B R Ambedkar University, Agra ... Muslim population which is not more than 25% in Western UP. ...
 7. "Ajit Singh struggling to retain Muslim vote", தி இந்து, Chennai, India, 2002-02-12, பார்க்கப்பட்ட நாள் 2009-07-24, ... the Muslim presence in western U.P. is said to be about 34 per cent ... [தொடர்பிழந்த இணைப்பு]
 8. Mishra, Mayank (19 September 2013). "Why the Jat-Muslim coalition has fallen apart in UP". பிசினஸ் ஸ்டாண்டர்ட். http://www.business-standard.com/article/current-affairs/why-the-jat-muslim-coalition-has-fallen-apart-in-up-113091900028_1.html. 
 9. A Glossary of the Tribes & Castes of Punjab by H. A Rose
 10. Ghaus Ansari (1960), Muslim caste in Uttar Pradesh: a study of culture contact (Volumes 12-13 of The Eastern anthropologist), Ethnographic and Folk Culture Society, 1960, ... confined primarily to the Rohilkhand and Meerut divisions of Uttar Pradesh. Pathans are generally considered to have come either from Afghanistan or from the Pashto-speaking tribes of the North-West ...
 11. Bagaulia (2005), Encyclopaedia Of Human Geography (Set Of 3 Vols.), Anmol Publications PVT. LTD., 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126124442, ... Sikhs also settled down in the Terai region of Uttar Pradesh, transforming this once malaria-infested wetland into a granary of northern India ...[தொடர்பிழந்த இணைப்பு]
 12. Jeelani, Gulam (29 October 2015). "30% honour killings of the country in west UP: AIDWA survey". News18.com இம் மூலத்தில் இருந்து 30 அக்டோபர் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151030192858/http://www.news18.com/news/uttar-pradesh/lucknow/30-honour-killings-of-the-country-in-west-up-aidwa-survey-830059.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_உத்தரப்_பிரதேசம்&oldid=3743648" இலிருந்து மீள்விக்கப்பட்டது