காஸ்கஞ்ச்

ஆள்கூறுகள்: 27°48′30″N 78°38′45″E / 27.80833°N 78.64583°E / 27.80833; 78.64583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஸ்கஞ்ச்
कासगंज
நகரம்
காஸ்கஞ்ச் is located in உத்தரப் பிரதேசம்
காஸ்கஞ்ச்
காஸ்கஞ்ச்
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் காஸ்கஞ்ச் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°48′30″N 78°38′45″E / 27.80833°N 78.64583°E / 27.80833; 78.64583
நாடு இந்தியா
மாவட்டம்கன்ஷிராம் நகர்
பரப்பளவு
 • மொத்தம்22.18 km2 (8.56 sq mi)
ஏற்றம்177 m (581 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்101,277
 • அடர்த்தி4,600/km2 (12,000/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்207123
வாகனப் பதிவுUP-87
இணையதளம்kasganj.nic.in

காஸ்கஞ்ச் (Kasganj), வட இந்தியாவி உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் கன்ஷிராம் நகர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[1]மாநிலத் தலைநகரமான லக்னோவிற்கு வடமேற்கே 297 கிலோ மீட்டர் தொலைவில் காஸ்கஞ்ச் நகரம் உள்ளது. இது ஆக்ராவிற்கு வடகிழக்கே 112 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 25 வார்டுகள் கொண்ட காஸ்கஞ்ச் நகரத்தின் மக்கள் தொகை 101,277 ஆகும். அதில் ஆண்கள் 53,552 மற்றும் பெண்கள் 47,725 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 891 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13,376 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.36% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,376 மற்றும் 30 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 75.34%, இசுலாமியர் 22.94%, பௌத்தர்கள் 0.68%, சீக்கியர்கள் 0.21%, கிறித்தவர்கள் 0.56% மற்றும் பிறர் 0.28% ஆகவுள்ளனர்.[2]

போக்குவரத்து[தொகு]

ஆக்ரா-பதாவுன்-பரேலி நகரங்களை இணைக்கும் மாநில நெடுஞ்சாலை எண் 33 காஸ்கஞ்ச் நகரம் வழியாகச் செல்கிறது.

இருப்புப் பாதை[தொகு]

காஸ்கஞ்ச் இரயில் நிலையம்[3] மதுரா, கான்பூர், பரேலி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, கௌஹாத்தி போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About District | Kasganj | India" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-03.
  2. Kasganj Population, Religion, Caste, Working Data Kanshiram Nagar, Uttar Pradesh - Census 2011
  3. Kasganj Railway Staion
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஸ்கஞ்ச்&oldid=3528574" இலிருந்து மீள்விக்கப்பட்டது