யமுனா விரைவுவழிச்சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யமுனா விரைவுவழிச்சாலை
Map
வழித்தட தகவல்கள்
நீளம்:165.537 km (102.860 mi)
பயன்பாட்டில்
இருந்த காலம்:
9 ஆகஸ்டு, 2012 – present
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:நொய்டா பெருநகர்
To:ஆக்ரா
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம்
நெடுஞ்சாலை அமைப்பு

யமுனா விரைவுவழிச்சாலை, 156 கி.மீ நீளமுள்ள ஆறு வழிச்சாலையாகும். இது இந்திய நகரங்களான நொய்டா பெருநகரையும் ஆக்ராவையும் இணைக்கிறது. இது இந்தியாவில் உள்ள மற்ற ஆறு வழிச்சாலைகளை விட நீளமானதாகும். இந்த திட்டத்துக்கு மொத்தமாக 128.39 பில்லியன் (US$1.6 பில்லியன்) செலவானது.[1]

இந்த விரைவுவழிச்சாலை நொய்டா பெருநகரில் தொடங்கி, கான்பூரையும், ஆக்ராவையும் நோக்கி செல்லும் இரண்டாம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள குபேர்பூரில் முடிவடைகிறது. 168 கி.மீ நீளமுள்ள 13 சேவை சாலைகளும் போடப்பட்டுள்ளன. இவற்றின் வழியாக இந்த விரைவுவழிச்சாலையை அடையலாம்.

தில்லியையும் ஆக்ராவையும் இணைக்கும் யமுனா விரைவுவழிச்சாலை

ஒவ்வொரு 5 கி.மீட்டர்களுக்கும் ஒரு சி.சி.டி.வி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு 25 கி.மீட்டர்களுக்கும் ஒரு காவல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஒவ்வொரு நாளும் இந்த சாலையில் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.[2]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]