தேசிய நெடுஞ்சாலை 83 (இந்தியா)
| தேசிய நெடுஞ்சாலை 83 | ||||
|---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை வரைபடம் (சிவப்பு வண்ணத்தில்) | ||||
தே. நெ. 83 தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அருகில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 389 km (242 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| மேற்கு முடிவு: | கோயம்புத்தூர் | |||
| திருச்சிராப்பள்ளி | ||||
| கிழக்கு முடிவு: | நாகப்பட்டிணம் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
| முதன்மை இலக்குகள்: | திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 83 (National Highway 83 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தே. நெ. 83 கிழக்கு-மேற்கு திசையில், முழுக்க முழுக்க இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது.[2][3] பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு 2018-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்பு இந்த தேசிய நெடுஞ்சாலை 209 என்று பெயரிடப்பட்டிருந்தது.[4][5]
வழித்தடம்
[தொகு]
தே. நெ. 83 கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினத்தை இணைக்கிறது.[6]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 544 முனையம் கோயம்புத்தூர் அருகில்
தே.நெ. 44 திண்டுக்கல் அருகில்
தே.நெ. 183 திண்டுக்கல் அருகில்
தே.நெ. 383 திண்டுக்கல் அருகில்
தே.நெ. 38 திருச்சிராப்பள்ளி அருகில்
தே.நெ. 336 திருச்சிராப்பள்ளி அருகில்
தே.நெ. 36 தஞ்சாவூர் அருகில்
விரிவாக்கம்
[தொகு]- தேசிய நெடுஞ்சாலை 83ன் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி 27கி.மீ நீளமுள்ள பாதை 656.51 கோடி மதிப்பினில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.[7] 01 திசம்பர் 2016 அன்று ஆரம்பிக்கப்பட்டு 24 ஜீன் 2020 அன்று முடிக்கப்பட்டது.[8][9][10][11]
- தேசிய நெடுஞ்சாலை 83ன் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் இடையேயுள்ள 65.37கி.மீ நீளமுள்ள பாதையானது 340.63கோடி மதிப்பினில் பக்கச்சாலையுடன் கூடிய இருவழிச் சாலையாக மேம்படுத்தப்படுகின்றது. முன்பு இந்த பாதையானது தே.நெ 67 என்று பெயரிடப்பட்டிருந்தது.[12][13]
தமிழ்நாட்டிற்குள்ளே செல்லும் தே.நெ 83ஆனது 131.9 கி.மீ நீளமுள்ள பொள்ளாச்சி - திண்டுக்கல் பிரிவு ரூ 3649 கோடி மதிப்பினில் மூன்று கட்டங்களாக நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகின்றது.[14][15][16] [17][18][19][20][21]
- ஒட்டன்சத்திரம் - பழனி சாலையின் 25கி.மீ நீளத்தில் 17.175கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 164.68 கோடி மதிப்பினில் மேம்படுத்தப்படுகின்றது. பழனி முருக பக்தர்களுக்கென தனி நடைபாதை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதியுடன் மேம்படுத்தப்படுகின்றது.[22]
| வரிசை எண் | திட்டம் | நீளம் | திட்ட முழுமை | தேசிய நெடுஞ்சாலை எண் | திட்ட மதிப்பீடு (கோடி) |
|---|---|---|---|---|---|
| 1 | கமலபுரம் - ஒட்டன்சத்திரம் | 36.5 | 2025 ஜீன் | 83 | 1038.51 |
| 2 | ஒட்டன்சத்திரம் - மடத்துகுளம்[23] | 45 | திறக்கப்பட்டுவிட்டது. | 83 | |
| 3 | மடத்துகுளம் - பொள்ளாச்சி | 50.07 | 2025 மார்ச் | 83 | 1342.52 |
- 28 பிப்ரவரி 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோதி தேசிய நெடுஞ்சாலை 83ன் பிரிவான ஒட்டன்சத்திரம் - மடத்துகுளம் நான்கு வழிச் சாலையை நாட்டிற்கு அர்பணித்தார், மேலும் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் இடையே உள்ள 65கி.மீ நீளத்திற்கு புதுப்பிக்கப்பட்ட பக்கச் சாலை வசதிகளுடன் கூடிய இருவழிச் சாலையையும் நாட்டிற்கு அர்பணித்தார்.[24][25][26][27]
- தேசிய நெடுஞ்சாலை 83ன் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் பிரிவின் கீழ் திருவாரூர் அருகே 14.2கி.மீ நீளத்திற்கு 470கோடி மதிப்பினில் சுற்றுச்சாலை அமைக்கப்படவிருக்கிறது.[28]
நன்மைகள்
[தொகு]- பொள்ளாச்சி கோயம்புத்தூர் நான்கு வழிச்சாலை பொள்ளாச்சி தொழிற்பேட்டையை இணைக்கும் வண்ணமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
- நான்கு வழிச்சாலையின் மூலமாக ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம் இடையேயுள்ள பிரயாண நேரமானது ஒரு மணி நேரத்திலிருந்து முப்பது நிமிடங்களாக குறைந்தது. பழனி முருகன் கோவில் செல்லுவதற்கு எளிமையான பயணத்தை உறுதிசெய்கின்றது.[29]
- தஞ்சாவூர் டெல்டா விவசாய உற்பத்தி பொருட்கள் திருச்சி, கோவை, மதுரை போன்ற பெரிய சந்தைகளுக்கு எடுத்துசெல்வது எளிதாகின்றது.
மேலும் பார்க்கவும்
[தொகு]- இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- தேசிய நெடுஞ்சாலை 81 (இந்தியா)
- தேசிய நெடுஞ்சாலை 87 (இந்தியா)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 4 December 2018. Retrieved 3 April 2012.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Retrieved 5 April 2019.
- ↑ "Rs 2,122 crore project to convert 3 Tamil Nadu NH stretches into 4-lane roads on NH 83". https://timesofindia.indiatimes.com/city/chennai/rs-2122-crore-project-to-convert-3-tamil-nadu-nh-stretches-into-4-lane-roads/articleshow/64299920.cms.
- ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
- ↑ https://elibrary.sansad.in/server/api/core/bitstreams/9906898d-b807-4037-9f6a-78244d2ff245/view
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). இந்திய அரசிதழ். Retrieved 5 April 2019.
- ↑ https://sansad.in/getFile/loksabhaquestions/annex/8/AU717.pdf?source=pqals
- ↑ https://indiainvestmentgrid.gov.in/opportunities/nip-project/706614
- ↑ https://www.facebook.com/watch/?v=814761909136834
- ↑ https://timesofindia.indiatimes.com/city/coimbatore/4-laning-of-nh-209-polarises-traders-activists/articleshow/14577625.cms
- ↑ https://www.thehindu.com/news/cities/Coimbatore/NHAI-to-implement-Pollachi-Road-widening-project/article14495852.ece
- ↑ https://www.mapsofindia.com/driving-directions-maps/nh209-driving-directions-map.html
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/strengthening-of-thanjavur-nagapattinam-highway-stretch-to-be-completed-by-may-2023/article65083945.ece/
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Jun/03/dindigul-pollachi-four-lane-road-to-be-completed-by-june-2024-2581263.html#:~:text=Dindigul%2DPollachi%20four%2Dlane%20road,be%20completed%20in%20August%202023.
- ↑ https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU517_3DA2xH.pdf?source=pqals
- ↑ https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AS51_LZ2SUD.pdf?source=pqals
- ↑ https://sansad.in/getFile/annex/267/AU3631_tmQNcz.pdf?source=pqars
- ↑ https://www.ptinews.com/story/business/the-dindigul-pollachi-four-lane-road-transforming-pollachi-s-real-estate-landscape/1228798
- ↑ https://timesofindia.indiatimes.com/city/chennai/rs-2122-crore-project-to-convert-3-tamil-nadu-nh-stretches-into-4-lane-roads/articleshow/64299920.cms
- ↑ https://www.business-standard.com/content/press-releases-ani/the-dindigul-pollachi-four-lane-road-transforming-pollachi-s-real-estate-landscape-124012000416_1.html
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Jun/03/dindigul-pollachi-four-lane-road-to-be-completed-by-june-2024-2581263.html
- ↑ https://www.newindianexpress.com/states/tamil-nadu/2022/Nov/17/nhai-to-convert-two-lane-nh-209-into-four-lane-2519347.html
- ↑ https://www.facebook.com/Official.NHAI/photos/the-4-lane-45-km-long-oddanchatram-madathukulam-section-on-nh-83-in-tamilnadu-ha/802639058724765/?_rdr
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2091508#:~:text=The%20estimated%20cost%20of%20the,with%20Bangladesh%2C%20Bhutan%20and%20Nepal.
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2009042
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2009124
- ↑ https://www.instagram.com/p/C34biucumV3/
- ↑ https://sansad.in/getFile/loksabhaquestions/annex/184/AU545_4tYAtF.pdf?source=pqals
- ↑ https://www.facebook.com/watch/?v=2078897685815263
