தேசிய நெடுஞ்சாலை 42 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 42
42

தேசிய நெடுஞ்சாலை 42
Map
தேசிய நெடுஞ்சாலை நிலப் படம் (சிவப்பு வண்ணத்தில்)
வழித்தட தகவல்கள்
நீளம்:397 km (247 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:அனந்தபூர்
 கதிரி
தெற்கு முடிவு:கிருட்டிணகிரி
அமைவிடம்
மாநிலங்கள்:ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு
முதன்மை
இலக்குகள்:
அனந்தபூர், கதிரி, மதனப்பள்ளி, புங்கனூர், வெங்கடகிரி கோட்டை, பலமனேர், குப்பம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 67 தே.நெ. 44

தேசிய நெடுஞ்சாலை 42 (National Highway 42 (India))(தே. நெ. 42), (முன்பு பழைய தேசிய நெடுஞ்சாலைகள் 205 மற்றும் 219 இன் பகுதியாக இருந்தது) என்பது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் செல்லும் இந்தியாவின் ஒரு முக்கிய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இதன் வடக்கு முனையம் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் உள்ளே அனந்தபூருக்கு தெற்கே தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பிலும், தெற்கு முனையம் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பிலும் உள்ளது.[2][3]

வழித்தடம்[தொகு]

இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

ஆந்திராவில் அனந்தபூர், கதிரி, மதனப்பள்ளி, புங்கனூர் மற்றும் குப்பம் வழியாகச் செல்கிறது. தமிழ்நாட்டில், இது கிருஷ்ணகிரியை தே. நெ. 44 உடன் இணைக்கிறது.[4]

மாநிலங்களில் பாதை நீளம்:

  • ஆந்திரப் பிரதேசம் - 378 km (235 mi)[3]
  • தமிழ்நாடு - 19 km (12 mi) [5]

சந்திப்புகள்[தொகு]

தே.நெ. 544DD குடேறு அருகில்
தே.நெ. 44 அனந்தபூர் அருகில்
தே.நெ. 716G கதிரி அருகில்
தே.நெ. 340 குரபாலகோட்டா அருகில்
தே.நெ. 71 மதனப்பள்ளி அருகில்
தே.நெ. 69 பாலமன்னேறு அருகில்
தே.நெ. 75 வெங்கடகிரி கோட்டை அருகில்
தே.நெ. 48 கிருஷ்ணகிரி அருகில்
தே.நெ. 44 முனையம், கிருஷ்ணகிரி அருகில்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Route map