இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தேசிய நெடுஞ்சாலை (இந்தியா) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்திய தேசிய நெடுஞ்சாலைகள்
இந்திய தேசிய நெடுஞ்சாலையும் மக்கள் அடர்த்தியையும் காட்டும் படம்
சென்னை பெங்களூரு விரைவு நெடுஞ்சாலை

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் நடுவண் அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படுகின்றன. இந்தச் சாலைகளில் பெரும்பாலானவை இரு வழிப்பாதைகள். 66,590 கிமீ தொலைவு சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக இருக்கின்றன. இந்தியாவிலேயே மிக நீளமான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 44 (NH 44) இருக்கிறது. இதன் நீளம் 4,112 கி.மீ. இது இந்தியாவின் வடக்கே [ஷிரிநகர்]]யில் தொடங்கி தெற்கே தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரியுடன் இணைகிறது. இந்தியாவின் மிகக் குறைவான தொலைவைக் கொண்ட தேசிய நெடுஞ்சாலையாக தேசிய நெடுஞ்சாலை எண் 47A(NH47A) இருக்கிறது. இதன் நீளம் 6 கி.மீ. இது கேரள மாநிலத்திலிருக்கும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த குண்டனூரையும் கொச்சி துறைமுகம் அமைந்துள்ள வெல்லிங்டன் தீவையும் இணைக்கிறது.

மொத்தச் சாலைக் கட்டமைப்பில் தேசிய நெடுஞ்சாலைகளின் பங்கு 2 சதவீதமாகும். ஆனால் அவை 40 சதவீத போக்குவரத்தை கையாளுகின்றன.

மாநில நெடுஞ்சாலைகள் அந்தந்த மாநில அரசுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மொத்தச் சாலைக் கட்டமைப்பில் இவை 1,31,899 கி.மீ தொலைவு சாலைகளை கொண்டுள்ளன.

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்பு[தொகு]