தேசிய விரைவுசாலை 2 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Indian National Expressway 2
2

தேசிய விரைவுசாலை 2
National Expressway 2
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு இதேநெஆ
நீளம்:135 km (84 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:குண்டிலி
To:பால்வால்
Location
Major cities:காசியாபாத், நொய்டா பெருநகர், பால்வால், சோனிபத்
Highway system

தேசிய விரைவுச்சாலை 2 (National Expressway 2) அல்லது KGP (சோனிபத் (குன்ட்லி)-காசியாபாத்-பல்வல்) கிழக்குப்புறத்தில் தில்லியைக்கடந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய விரைவுச்சாலை ஆகும். இந்தியத் தலைநகரைச் சுற்றி அரை வட்டமாக இருக்குமாறு அமைக்கப்படவுள்ள இச்சாலை ஐந்து மாவட்டங்களை கடந்து செல்லும்: ஹரியானா மாநிலத்தின் சோனிபத் மற்றும் பரிதாபாத் & உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பாக்பத், காசியாபாத் மற்றும் கெளதம் புத் நகர். இச்சாலை முழுவதிலும் ஊர்திகளின் வேக வரம்பு மணிக்கு 120 கிமீ ஆகும். இச்சாலையை மேம்படுத்த இந்திய அரசு நிதியளிக்க ஒப்புக்கொண்டுள்ளது.[1]

இந்தச் சாலையானது தில்லி வழியாகச் செல்லும் 50,000 சரக்குந்துகளுக்கு மாற்றுப் பாதையாக விளங்கும். மேலும் இது தில்லியின் காற்று மாசினை 27% வரை குறைக்கும். [2][3] இது 27 மே 2018 அன்று பிரதமர் நரேந்திர மோதியினால் திறந்து வைக்கப்பட்டது.[4] இச்சாலை யமுனா விரைவுச்சாலையுடன் இணைக்கப்படும். [5]

சாலையின் சிறப்புகள்[தொகு]

  • சாலையின் இருபக்கமும் மிதிவண்டிக்கான தனித்தடம் (2.5 மீ அகலம்)
  • ஒவ்வோர் அரை கிலோமீட்டருக்கும் மழை நீர் சேகரிப்பு வசதி
  • அதிவிரைவாகச் செல்வோரைக் கண்காணிக்க கேமராக்கள்
  • 135 கி.மீ நீளமுள்ள இச்சாலையில் சென்ற தொலைவுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தும் வசதி


மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]