தேசிய நெடுஞ்சாலை 40 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 40 | ||||
---|---|---|---|---|
தேசிய நெடுஞ்சாலை நிலப்படம் (சிவப்பு வண்ணத்தில்) | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 408 km (254 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | கர்னூல் | |||
தெற்கு முடிவு: | இராணிப்பேட்டை | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஆந்திரப்பிரதேசம்: 381 km (237 mi) தமிழ்நாடு: 27 km (17 mi) | |||
முதன்மை இலக்குகள்: | நந்தியால் - கடப்பா -பில்லேறு -சித்தூர் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 40 (National Highway 40 (India)), என்பது முன்னர் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த 4 மற்றும் 18 ஆகியவற்றின் பகுதிகளின் இணைவுச் சாலையாகும். இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை கர்னூலில் தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பில் தொடங்கிக் கடப்பா மற்றும் சித்தூர் வழியாகத் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் முடிவடைகிறது.[1][2] இது ராயலசீமா விரைவு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. கர்னூலுக்கும் கடப்பாவுக்கும் இடையே இந்த நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
வழித்தடம்
[தொகு]இது கர்னூலில் தொடங்கி நந்தியால், அல்லகத்தா, மைடுகூர், கடப்பா, ராயச்சோட்டி, பைலேரு, சித்தூர் வழியாகச் சென்று ராணிப்பேட்டையில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 381 கி. மீ. ஆகும். இதில் 236.74 கி. மீ. தூரம் ஆந்திராவிலும் மற்றும் 27.00 km (16.78 mi) தமிழ்நாட்டிலும் செல்கிறது.[2][3]
கர்னூல் ↔ நந்தியால் ↔ அல்லகத்தா ↔ மைடுகூர் ↔ கடப்பா ↔ ராயச்சோடி ↔ பிலேரு ↔ சித்தூர் ↔ ராணிப்பேட்டை
சந்திப்புகள்
[தொகு]- தே.நெ. 44 கர்னூல் அருகில் முனையம்[4]
- தே.நெ. 340C கர்னூல் அருகில்
- தே.நெ. 544D நந்தியால் அருகில்
- தே.நெ. 67 மைடுகூர் அருகில்
- தே.நெ. 716 கடப்பா வெளிச்சாலை அருகில்
- தே.நெ. 340 ராயச்சோடி அருகில்
- தே.நெ. 71 பிலேரு அருகில்
- தே.நெ. 140 பூதலப்பட்டு அருகில்
- தே.நெ. 69 சித்தூர் அருகில்
- தே.நெ. 48 இராணிப்பேட்டை அருகில் முனையம்
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.
- ↑ 2.0 2.1 "List of National Highways passing through A.P. State". Roads and Buildings Department. Government of Andhra Pradesh. Archived from the original on 28 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 February 2016.
- ↑ "The List of National Highways in India" (PDF). சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India as on 30.11.2018". சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் (இந்தியா). Archived from the original on 4 June 2019. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019.