தேசிய நெடுஞ்சாலை 36 (இந்தியா)
| தேசிய நெடுஞ்சாலை 36 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| நீளம்: | 334 km (208 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | விக்கிரவாண்டி | |||
| தெற்கு முடிவு: | மானாமதுரை | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தமிழ்நாடு | |||
| முதன்மை இலக்குகள்: | கோலியனூர் (விழுப்புரம்) - பண்ருட்டி - நெய்வேலி (NLC) - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம் - தஞ்சாவூர் - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருமயம் - திருப்பத்தூர் - சிவகங்கை | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 36 (என். எச் 36) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 334 கி.மீ. (208 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் மானாமதுரை இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது பின்னர் NH 36 ஆக மாற்றியமைக்கபட்டது.
வழித்தடம்
[தொகு]கோலியனூர் (விழுப்புரம்) - பண்ருட்டி - நெய்வேலி (NLC) - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம் - தஞ்சாவூர் - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருமயம் - திருப்பத்தூர் - சிவகங்கை
விரிவாக்கம்
[தொகு]தேசியநெடுஞ்சாலை 36(முன்பு தே.நெ 45C), 164கி.மீ நீளமுள்ள விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் பாதையானது நான்கு வழி சாலையாக மேம்படுத்த முன்மொழியப்பட்டது. முதலில் இந்த திட்டம் விக்கிரவாண்டி - மீன்சுருட்டி வரை நான்கு வழி பாதையாகவும், பின்பு மீன்சுருட்டி - தஞ்சாவூர் வரை, 'நடைபாதைகளுடன் கூடிய இரு வழிப்பாதைகளாகவும்' கட்டமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.[2][3]
இந்த திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றது.[4][5][6]
| வரிசை எண் | திட்டம் | நீளம் (கி.மீ) |
|---|---|---|
| 1 | தஞ்சாவூர் - சோழபுரம்[7] | 47.87 |
| 2 | சோழபுரம் - சேத்தியாதோப்பு[8] | 50.49 |
| 3 | சேத்தியாதோப்பு - விக்கிரவாண்டி[9] | 65.96 |
06 மார்ச் 2019 அன்று பிரதமர் நரேந்திர மோதி தேசிய நெடுஞ்சாலை 36ன் பகுதியான விழுப்புரம், கடலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் வரையுள்ள 122கி.மீ நீளமுள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்த அடிக்கல் நாட்டினார்.[10]
06 ஏப்ரல் 2025 அன்று பிரதமர் நரேந்திரமோதி, தேசிய நெடுஞ்சாலை 36ன் பகுதியான தஞ்சாவூர் - சோழபுரம் நான்கு வழிச்சாலையை நாட்டிற்கு அர்பணித்தார்.[11][12]
26 ஜீலை 2025 அன்று பிரதமர் நரேந்திர மோதி, 2350 கோடி மதிப்பினில் கட்டப்பட்ட தேசிய நெடுஞ்சாலை 36ன் பகுதியான சோழபுரம் - சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலையை நாட்டிற்கு அர்பணித்தார்.[13]
நன்மை
[தொகு]- தேசிய நெடுஞ்சாலை 36ன் விரிவாக்கத்தின் காரணமாக விழுப்புரம், கடலூர், அரியலூர், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதி பயன்பெறுகின்றது.
- இந்த விரிவாக்கத்தின் காரணமாக கும்பகோணம் - தஞ்சாவூர் இடையே பயணநேரம் 75-90நிமிடங்களிலிருந்து 30நிமிடமாக குறையும், மேலும் கும்பகோணம் - திருச்சியை 90 நிமிடங்களில் சென்றடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.[14]
- பண்ருட்டி & வடலூர் பகுதிகளில் அடர்த்தியாக உள்ள அதிக எண்ணிக்கையிலான குடியிருப்பு கட்டமைப்புகள் இடிக்கப்படுவதைத் தவிர்க்க, சுற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வடலூரில் தற்போதுள்ள ஒற்றை வழி கன்னித்தோப்பு நெடுஞ்சாலை பாலம் புதிய நான்கு வழி பாலத்தால் மாற்றப்படுகிறது, இதனால் பலவீனமான பாலத்தின் வழியாக நீண்ட காலமாக நிலவி வந்த போக்குவரத்து சிக்கல் தீர்க்கப்படுகிறது. இந்த சாலை உள்ளூர் பகுதியின் விவசாயப் பொருட்களை அருகிலுள்ள சந்தைப்படுத்தல் மையங்களுக்கு கொண்டு செல்வதை மேம்படுத்தும்.[15]
- இதில் மூன்று புறவழிச்சாலைகள், கொள்ளிடம் ஆற்றின் மீது ஒரு கிமீ நான்கு வழிப் பாலம், நான்கு பெரிய பாலங்கள், ஏழு மேம்பாலங்கள் மற்றும் பல சுரங்கப்பாதைகள் ஆகியவை அடங்கும், இது சேத்தியாத்தோப்பு-சோழபுரம் இடையே பயண நேரத்தை 45 நிமிடங்கள் குறைத்து டெல்டா பிராந்தியத்தின் கலாச்சார மற்றும் விவசாய மையங்களுக்கான இணைப்பை அதிகரிக்கிறது.[16]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. Retrieved 2012-12-02.
{{cite web}}: Cite has empty unknown parameter:|4=(help) - ↑ https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf
- ↑ https://www.pib.gov.in/newsite/PrintRelease.aspx?relid=148150
- ↑ https://timesofindia.indiatimes.com/city/trichy/centre-to-give-rs-1-lakh-crore-more-to-tn-for-road-projects-nitin-gadkari/articleshow/113347464.cms
- ↑ https://x.com/TnInvestment/status/1880507207093219437
- ↑ https://www.patelinfra.com/pschpl.php/projectservices.php#:~:text=It%20links%20Chennai%20with%20Thanjavur,%2C%20Thanjavur%2C%20kumbakonam%2C%20Puducherry.
- ↑ https://indiainvestmentgrid.gov.in/opportunities/nip-project/613335
- ↑ https://indiainvestmentgrid.gov.in/opportunities/nip-project/613346
- ↑ https://indiainvestmentgrid.gov.in/opportunities/nip-project/616685
- ↑ https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1567526
- ↑ https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2118700
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118844
- ↑ https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2148178
- ↑ https://www.thehindu.com/news/cities/Tiruchirapalli/thanjavur-kumbakonam-cholapuram-nh-section-beckons-travellers-with-smooth-ride/article69108976.ece/
- ↑ https://indiainvestmentgrid.gov.in/opportunities/nip-project/616685
- ↑ https://www.pmindia.gov.in/en/news_updates/pm-lays-foundation-stone-inaugurates-dedicates-development-works-worth-over-%e2%82%b94800-crore-in-thoothukudi-tamil-nadu/?comment=disable
வெளி இணைப்புகள்
[தொகு]- [1] Vikkiravandy-Thanjavur National Highway Map
- [2] பரணிடப்பட்டது 2012-10-22 at the வந்தவழி இயந்திரம் New Alignment of NH-45C
- [3] பரணிடப்பட்டது 2009-04-10 at the வந்தவழி இயந்திரம் Old Alignment of NH-45C
