தேசிய நெடுஞ்சாலை 66 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழித்தட தகவல்கள்
நீளம்:214 km (133 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:புதுச்சேரி
To:கிருட்டிணகிரி, தமிழ்நாடு
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு: 210 km (130 mi)
புதுச்சேரி: 4 km (2.5 mi)
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 65 தே.நெ. 67

தேசிய நெடுஞ்சாலை 66 இந்தியாவில் புதுச்சேரியை பெங்களூருடன் இணைக்கும் ஓர் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது புதுச்சேரியிலுள்ள இந்திரா காந்தி சதுக்கத்திலிருந்து துவங்கி, வடமேற்கே திண்டிவனம் வரை சென்று பின்னர் மேற்கில் திருவண்ணாமலை வழியாக ஊத்தங்கரை வரைச் செல்கிறது. இங்கிருந்து தே. நெ. 46இல் அமைந்துள்ள கிருட்டிணகிரியில் இணைகிறது. இந்த சந்திப்பிலிருந்து 1 km (0.62 mi) தொலைவிலுள்ள நே.நெ. 7இலிருந்து தே.நெ. 46 துவங்குகிறது. தேசிய நெடுஞ்சாலை 66இன் மொத்த தொலைவு 214 km (133 mi) ஆகும்.[1] [2]

வழித்தடம்[தொகு]

புதுச்சேரி - திருச்சிற்றம்பலம் - கிளியனூர் - திண்டிவனம் - வல்லம் - செஞ்சி - பென்னாத்தூர் - திருவண்ணாமலை - பாச்சல் - செங்கம் - சிங்காரப்பேட்டை - ஊத்தங்கரை - சாமல்பட்டி - மத்தூர் - கன்னடஹள்ளி - கிருட்டிணகிரி.

சாலை மேம்பாடு[தொகு]

புதுச்சேரிக்கும் திண்டிவனத்திற்கும் இடையே 38.61 km (23.99 mi) தொலைவுள்ள சாலை நான்குவழிப் பாதையாக மேதாசு-என்சிசி கூட்டிணைவு கட்டமைத்துள்ளது.[3][4]

சான்றுகோள்கள்[தொகு]

  1. [1] பரணிடப்பட்டது 2011-10-27 at the வந்தவழி இயந்திரம் Details of National Highways in India-Source-Govt. of India
  2. Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).
  3. .:NHAI:.Completed Stretches on Golden Quadrilateral பரணிடப்பட்டது 2012-05-17 at the வந்தவழி இயந்திரம் Dindivanam to Pondicherry widening
  4. KV, Ramana (2009-07-14). "Nagarjuna to go on sans Maytas". Daily News and Analysis. Hyderabad. http://www.dnaindia.com/money/report_nagarjuna-to-go-on-sans-maytas_1273790. பார்த்த நாள்: 2012-07-20.