தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 1
1

தேசிய நெடுஞ்சாலை 1
தேசிய நெடுஞ்சாலை 1 கடும் நீலத்தில் காட்டப்பட்டுள்ளது.
வழித்தட தகவல்கள்
AH1 AH2 இன் பகுதி
நீளம்:456 km (283 mi)
NS: 380 km (240 mi) (புது தில்லி - ஜலந்தர்)
Phase III: 49 km (30 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:தில்லி
 தேநெ 2 தில்லியில்

தேநெ 8 தில்லியில்
தேநெ 10 தில்லியில்
தேநெ 24 தில்லியில்
தேநெ 58 தில்லியில்
தேநெ 22 அம்பாலாவில்
தேநெ 65 அம்பாலாவில்
தேநெ 1A ஜலந்தரில்
தேநெ 71 ஜலந்தரில்

தேநெ 15 அம்ரித்சரில்
வடக்கு முடிவு:அடாரி, பஞ்சாப்
அமைவிடம்
மாநிலங்கள்:தில்லி: 22 km (14 mi)
அரியானா: 180 km (110 mi)
பஞ்சாப்: 254 km (158 mi)
முதன்மை
இலக்குகள்:
தில்லி - சோனிபத்- குருச்சேத்திரம் - அம்பாலா - ஜலந்தர் - லூதியானா - பாக்வாரா - அம்ரித்சர் - Iஇந்தோ-பாக் எல்லை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 235 தே.நெ. 1A

தேசிய நெடுஞ்சாலை 1 (National Highway 1 அல்லது NH 1) பாக்கித்தான் எல்லை அருகே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான புது தில்லியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை ஷெர் ஷா சூரியின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது கிராண்ட் ட்ரங்க் ரோடு என்ற சாலையின் ஒருபகுதியாகும்.[1] ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என தேசிய நெடுஞ்சாலை துறை பிரித்துள்ளது. இச்சாலை மிகவும் பழமையான ஒன்று.

சாலை அமைப்பு[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 1 அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, ராச்புரா, அம்பாலா, குருச்சேத்திரம், கர்னால், பானிப்பட், சோனிபட், மற்றும் தில்லி போன்ற நகரங்களுக்கு ஊடாகச் செல்கின்றது. இச்சாலை 456 கி.மீ (283 மைல்) நீளம் கொண்டது. இந்த வழியில்தான் தில்லி-லாகூர் பேருந்து வசதி நடைபெருகிறது. இச்சாலை ஒரே அளவாக இல்லாமல் வாகா எல்லையிலிருந்து ஜலந்தர் வரை 4 வழிச்சாலையாகவும், ஜலந்தரிலிருந்து சோனிபட் மற்றும் தலைநகர் டெல்லி சந்திப்பு வரை 6 வழிப்பாதையாகவும், அதன்பின்னர் 8 வழிப்பாதையாகவும் அமைந்துள்ளது.

மேற்கோள்[தொகு]

  1. "எனது இந்தியா (நீண்டு செல்லும் சாலை". எஸ். ராமகிருஷ்ணன் (மழைக்காகிதம்). Saturday, January 05, 2013. http://newindian.activeboard.com/t48922769/topic-48922769/?sort=newestFirst&page=. பார்த்த நாள்: 28 ஆகஸ்ட் 2013.