தேசிய நெடுஞ்சாலை 55 (இந்தியா)
தோற்றம்
தேசிய நெடுஞ்சாலை 55 | ||||
---|---|---|---|---|
![]() | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
நீளம்: | 263 km (163 mi) | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | ஒடிசா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 55 (National Highway 55 (India))(முன்னர் தே. நெ. 42) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள சம்பல்பூரை கட்டக்கினை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] சம்பல்பூரில் உள்ள மானேசுவரில் உள்ள தே. நெ. 53இல் தொடங்கி, கட்டக் மங்குலி சதுக்கத்தில் தே. நெ 16இல் முடிவடைகிறது.[2] இது கட்டக்-சம்பல்பூர் நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகள் மறுசீரமைக்கப்படுவதற்கு முன்பு, தே. நெ-55யின் பாதை பழைய தேசிய நெடுஞ்சாலை 42இன் ஒரு பகுதியாக இருந்தது.[3] இந்த தேசிய நெடுஞ்சாலை 263 கி.மீ (163 மைல்) நீளம் கொண்டது.[4]
வழித்தடம்
[தொகு]தே. நெ. 55 சம்பல்பூர், ரெட்ஹாகோல், போயிண்டா, படகெரா, அனுகோள், தேன்கனல் ஆகியவற்றை இணைக்கிறது. இந்நெடுஞ்சாலை ஒடிசா மாநிலத்தில் கட்டக்கில் முடிவடைகிறது.[2]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 53 சம்பல்பூர் அருகே முனையம்[2]
தே.நெ. 153B ரெட்ஹாகோல் அருகே தேசிய நெடுஞ்சாலை 153பி
தே.நெ. 655 படகெரா அருகே
தே.நெ. 149 பனார்பால் அருகே
தே.நெ. 655 குந்துனி அருகே
தே.நெ. 16 கட்டாக் அருகே[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 31 March 2012. Retrieved 3 April 2012.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Ministry of Road Transport and Highways Notification Sep 2015" (PDF). The Gazette of India. Retrieved 7 May 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 20 June 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 20 June 2019.